ஹைதராபாத்: நேற்று (மே 8) சோனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் ஒரு விமான ஆம்புலன்சில் ஹைதராபாத்திற்கு அனுப்பிவைத்த நாக்பூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண்மணி மே 6ஆம் தேதி இரவு காலமானார். கடந்த மாதம் எக்மோ இயந்திரடத்துடன் அவர் கடுமையாக போராடினார். நான் உங்களை (பாரதி) ஒருபோதும் சந்தித்ததில்லை என்றாலும், என் இதயத்தில் நீங்கள் எப்போதும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடிப்பீர்கள். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். சில நேரங்களில் வாழ்க்கை உண்மையிலேயே நியாயமற்றது" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த மாதம், ஓய்வுபெற்ற ரயில்வே அலுவலரின் மகள், பாரதி கரோனாவால் பாதிக்கப்பட்டார். சோனுவின் ஏற்பாடால் நாக்பூரிலிருந்து ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் சென்றார். கரோனா காரணமாக பாரதியுடைய நுரையீரலில் கிட்டத்தட்ட 85 முதல் 90 சதவீதம் வரை பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. சோனு ஆரம்பத்தில் நாக்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உதவினார். அப்போது அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். நோயாளியை எக்மோ சிகிச்சைக்காக ஹைதராபாத்தின் அப்பல்லோ மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்திருந்தார். இவ்வளவு போராடியும் பாரதி உயிரிழந்துவிட்டது பெரும் சோகம்.
கடந்த ஆண்டு முதல், கரோனா நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு உதவ சோனு அயராது உழைத்து வருகிறார். மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அதிக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்குவதற்காக சோனு சூட் அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கியுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதையும் படிங்க: 'தன்னம்பிக்கை... தளராத உழைப்புமே மிகமிக உன்னதமென' முதலமைச்சரை வாழ்த்திய பாக்யராஜ்!