ETV Bharat / sitara

13 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் திரும்பும் 'ஷில்பா ஷெட்டி' - பிரபுதேவாவின் மிஸ்டர் ரோமியோ

13 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நடிக்கும் 'நிகாமா' திரைப்படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

shilpa-shetty
shilpa-shetty
author img

By

Published : Dec 18, 2019, 9:19 AM IST

பிரபுதேவாவின் 'மிஸ்டர் ரோமியோ' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷில்பா ஷெட்டி.

பாலிவுட் திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

shilpa-shetty
மிஸ்டர் ரோமியோ படத்தில் ஷில்பா ஷெட்டி

ஷாருக்கான், அக்‌ஷய் குமார், சல்மான் கான் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்துள்ள நடிகை ஷில்பா ஷெட்டி சுமார் 13 ஆண்டு இடைவெளிக்குப் பின் தற்போது பாகி, முன்னா மைக்கேல் உள்ளிட்ட படங்களை இயக்கிய சபீர் கான் இயக்கும் 'நிகாமா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தில் அபிமன்யு தஸ்ஸானி, ஷிர்லி செதியா, நரேன் குமார், தீப்ராஜ் ராணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

காதல், நகைச்சுவை, அதிரடி கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தை சோனி பிக்சர்ஸ் மற்றும் சபீர் கான் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இந்தப்படம் 2020 ஜுன் 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஷில்பா ஷெட்டி, 'நிகாமா' குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அற்புதமானது எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...

ஆஸ்கர் ரேஸிலிருந்து வெளியேறிய 'கல்லி பாய்' - கனவான விருது!

Intro:Body:

https://www.outlookindia.com/newsscroll/shilpa-shetty-returns-in-nikamma-on-june-5-2020/1687995/?next

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.