அண்மையில் தனது ஹீரோ திரைப்படத்தில் பார்க்கப்பட்ட பாலிவுட்டின் கிங் கான் ஷாருக்கான் தற்போது நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகும் 'ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதைத்தொடர்ந்து அயன் முகர்ஜியின் இயக்கத்தில் பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
'ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில் ஷாருக்கான் செய்தியாளராக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் பத்மபூஷன் விருது பெற்ற இந்திய விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படமாகும்.
'ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட்', 'பிரம்மாஸ்திரா' திரைப்படங்களில் சில காட்சிகளில் ஷாருக்கான் ஏற்கனவே நடித்துள்ளார். இந்தப் படங்களில் ஷாருக்கானை காண அவரது ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.