பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் மகள் சாரா அலிகான் பாலிவுட்டில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவர் தனுஷூடன் ‘அம்பிகாபதி’ என்னும் படத்தில் நடித்திருந்தார். இவர் நடிகையாக மட்டுமல்லாது சமூகவலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூகவலைதளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிடும்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
பாலிவுட்டுக்கு வரும் முன்பு சாரா அலிகானுக்கு ஹார்மோன் கோளாறால் கருப்பையில் பிரச்னை ஏற்பட்டு உடல் எடை கூடியுள்ளது. இந்நிலையில், சாரா அதிக எடையுடன் இருந்த காலத்தில் விமானத்தில் அவர் எடுத்த வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் சாரா அலிகான் விமானத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் அருகில் அமர்ந்திருந்த அவர் தோழி உறங்குகிறார். பின்னணியில் இந்தி பாடல் ஒலிக்கிறது. இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்யப்பட்டும்வருகிறது. பின் ஹார்மோன் கோளாறை முறையான சிகிச்சையின் மூலம் சரி செய்துகொண்டு தனது எடையை குறைத்துள்ளார். அதன் பிறகே பாலிவுட் திரைத்துறையில் நுழைந்துள்ளார் சாரா அலிகான்.
இதையும் வாசிங்க: அம்பிகாபதி 2ஆம் பாகத்தில் சாரா அலி கான்!