ETV Bharat / sitara

'இதற்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்..!' - சல்மானை உருக வைத்த ரசிகை! - draw

சல்மான் கானின் உருவத்தை கால்களால் வரைந்த மாற்றுத்திறனாளியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

salman
author img

By

Published : Jul 17, 2019, 7:24 PM IST

பாலிவுட்டில் அதிரடி வசூல் மன்னனாக சல்மால் கான் விளங்கி வருகிறார். சமீபத்தில் வெளியான பாரத் படம், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, 'தபாங்க் 3' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகர் பிரபுதேவா இயக்கி வருகிறார். இப்படத்தை சல்மான் கான் நிறுவனமே தயாரிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பிரபுதேவா, சல்மான் கான், கன்னட நடிகர் சுதீப் ஆகியோர் ஒன்றாக நடனமாடிய வீடியோ பெரிதும் வைரலானது.

தற்போது சல்மான் கானின் ரசிகை ஒருவர் அவரது புகைப்படத்தை அச்சு அசலாக ஓவியமாக வரைந்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அப்பெண் ஒரு மாற்றுத்திறனாளி. சல்மானின் புகைப்படத்தை தனது கால்களால் வரைந்து அசத்தியுள்ளார்.

சல்மானின் படத்தை கால்களால் வரைந்த மாற்றுதிறனாளி!

இந்நிலையில், அப்பெண் வரைந்த ஓவியத்தை சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில்,"இதற்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் மனது நிறைந்த வாழ்த்துக்களும் அன்பும். கடவுள் ஆசி உனக்கு என்றும் இருக்கும்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Intro:Body:

salman twitter response to his fan 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.