ETV Bharat / sitara

'சென்னை எக்ஸ்பிரஸ் 2' - சாரா அலிகானுக்கு பச்சைக் கொடி காட்டும் இயக்குநர் - தோஸ்தானா

'சென்னை எக்ஸ்பிரஸ் 2' திரைப்படத்தில் சாரா அலிகான், கார்த்திக் ஆர்யன் ஜோடி நடிக்க வேண்டும் என இயக்குநர் ரோஹித் ஷெட்டி விருப்பம் தெரிவித்துள்ளார்.

Rohit Shetty
Rohit Shetty
author img

By

Published : Feb 7, 2020, 10:47 AM IST

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. இந்தப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார்.

தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய முக்கிய தகவலை ரோஹித் ஷெட்டி வெளியிட்டுள்ளார். எஃப்எம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரிடம் 'சென்னை எக்ஸ்பிரஸ் 2' படம் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் ஷெட்டி, கார்த்திக் ஆர்யன், சாரா அலிகான் ஜோடி 'சென்னை எக்ஸ்பிரஸ் 2' படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும். இருவரும் இணைந்து நடித்துள்ள 'லவ் ஆஜ் கல்' படம் வெளியாவதற்கு முன்பே நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. இருவரின் கெமிஸ்ட்ரியும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என தெரிவித்தார்.

Rohit Shetty
ரோஹித் ஷெட்டி - சாரா அலிகான்

முன்னதாக ரோஹித் ஷெட்டி இயக்கிய சிம்பா திரைப்படத்தில் சாரா அலிகான் நடித்திருந்த நிலையில், அடுத்த படமான 'சென்னை எக்ஸ்பிரஸ் 2'-விலும் சாரா அலிகானை நடிக்க வைக்க ரோஹித் ஷெட்டி தயாராகி வருகிறார்.

இம்தியாஸ் அலி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், சாரா அலிகான் நடித்துள்ள 'லவ் ஆஜ் கல்' படம் வரும் காதலர் தினத்தன்று வெளியாகிறது. மேலும், சாரா அலிகான், வருண் தவான் நடிப்பில் 'கூலி நம்பர் 1' படம் வரும் மே மாதம் வெளியாக இருக்கிறது. இது மட்டுமல்லாது தனுஷ், அக்ஷய் குமார் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கும் 'அட்ராங்கி ரே' படத்திலும் சாரா அலிகான் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் கார்த்திக் ஆர்யன் நடிப்பில், 'தோஸ்தானா', 'பூல் புலைய்யா' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

இதையும் படிங்க...

முருகக் கடவுளை இழிவுபடுத்தியதாக யோகி பாபு மீது போலீஸ் புகார்!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/rohit-shetty-wants-sartik-on-board-for-chennai-express-2/na20200206195907430

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.