திரைப்பட விமர்சகர்களில் சிலர் மட்டுமே திரைத்துறையினராலும் பெரிதாக மதிக்கப்படுவார்கள். அப்படி ஒரு நபர்தான் ராஷித் இரானி. இந்திய திரையுலகின் முன்னணி திரைப்பட விமர்சகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், ஜூலை 30ஆம் தேதி அவர் வீட்டிலேயே இறந்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களாக அலுவலகத்துக்கு வராததால், அவரது அலுவலக தோழர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் உதவியோடு அவர் வீட்டுக் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் இறந்தது தெரியவந்துள்ளது.
திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் கரன் ஜோகர், உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் ராஷித். நமக்குள் நடந்த விவாதங்கள், உரையாடல்கள் அனைத்து மறக்க முடியாதவை. சினிமா குறித்த உங்களது ஆழ்ந்த பார்வை என்றுமே பொக்கிஷம்தான் என குறிப்பிட்டுள்ளார்.
-
Rest in peace Rashid….I remember all our interactions and conversations so fondly…. Your insight on Cinema will always be treasured…..🙏🙏🙏🙏 https://t.co/kWTyaQpmn4
— Karan Johar (@karanjohar) August 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rest in peace Rashid….I remember all our interactions and conversations so fondly…. Your insight on Cinema will always be treasured…..🙏🙏🙏🙏 https://t.co/kWTyaQpmn4
— Karan Johar (@karanjohar) August 2, 2021Rest in peace Rashid….I remember all our interactions and conversations so fondly…. Your insight on Cinema will always be treasured…..🙏🙏🙏🙏 https://t.co/kWTyaQpmn4
— Karan Johar (@karanjohar) August 2, 2021
இதையும் படிங்க: அனைவருக்கும் கல்வி: விழிப்புணர்வை ஏற்படுத்தும் தியா மிர்சா