ETV Bharat / sitara

சுஷாந்த் சிங் தற்கொலை: நடிகை ரியா உச்ச நீதிமன்றத்தில் மனு! - ரியா சக்ரபோர்த்தி மீது வழக்கு

மும்பை: மும்பையில் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பாக அவரது தந்தை நடிகை ரியா மீது பிகார் மாநிலத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அந்த வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி நடிகை ரியா சக்கரபோர்த்தி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ரியா சக்ரபோர்த்தி
ரியா சக்ரபோர்த்தி
author img

By

Published : Jul 31, 2020, 5:40 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14-ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் மரணத்திற்கு பின்னர் பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது. இவரின் மரணத்திற்கு நீதி கேட்டு சுஷாந்த்தின் தந்தை, சுப்பிரமணியன் சுவாமி, கங்கனா ரனாவத், சுஷாந்த்தின் காதலியாக கூறப்படும் நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் சுஷாந்த்தின் தந்தை கே. கே. சிங் பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட ஆறு பேர் மீது சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்துள்ளார்.
அதில், “சுஷாந்த் சிங் 2019ஆம் ஆண்டு பாலிவுட்டில் நல்ல நிலையில் இருக்கும்போது ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தொந்தரவு செய்துள்ளனர்.
சுஷாந்த்தின் வங்கிக் கணக்கில் இருந்து பலமுறை அவருக்கு சம்பந்தமில்லாத நபர்களின் வங்கி கணக்கிற்கு பணம் சென்றுள்ளது.

ரியா ஜூன் 8ஆம் தேதி வரை சுஷாந்த் சிங்குடன் நேரடி தொடர்பில் இருந்தார். அவரது மருத்துவ அறிக்கைகளை ஊடகங்களுடன் வெளியிடுவதாக பலமுறை அச்சுறுத்தி உள்ளார்.
அதுமட்டுமல்லாது சுஷாந்தின், லேப்டாப், கிரெடிட் கார்டுகள், செல்போன் ஆகியவை திருடப்பட்டுள்ளது” என கே கே சிங் அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்தப் புகாரை அடுத்து காவல்துறையினர் ரியா உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தனது மீதான புகாரை பாட்னா காவல் துறையிடமிருந்து மும்பை காவல் துறைக்கு மாற்றக்கோரி ரியா உச்சநீதிமன்றத்தில் இணையம் மூலமாக மனு அளித்தார்.
இந்தப் புகார் குறித்து ரியா கூறுகையில், “சுஷாந்த் சிங்கின் தந்தை தன் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்துள்ளார். எனக்கு கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் இருப்பதால் இந்த வழக்கை பாட்னாவில் இருந்து மும்பைக்கு மாற்றினால் வழக்கு விசாரணை நியாயமான முறையில் இருக்கும்” என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.