நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதனால் நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,44,786 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,08,99,394 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மேலும், 1,57,930 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை ரன்பீரின் அம்மா நீது கபூர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க...கவனமாக இருந்திருக்க வேண்டும்; மன்னிக்கவும்!