ஹாலிவுட் இயக்குநர் பேரி லெவின்சன் இயக்கத்தில் ஓஷோ என்று அழைக்கப்படும் ரஜனீஷ் உதவியாளர் ஆனந்த ஷீலா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'ஷீலா' என்னும் பெயரில் படம் உருவாக உள்ளது.
1980களில் ஓஷோவின் ரஜனீஷ் ஆசிரமத்தில் கொலை நடந்திருப்பதாகவும், அதில் 700க்கும் மேற்பட்டோர் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாகவும் எழுந்த சர்ச்சையில் ஆனந்த் ஷீலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஓஷோவுடனான அவரது நாட்களை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக உள்ளது.
இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பதை, தான் விரும்பவில்லை என்று ஆனந்த் ஷீலா தெரிவித்திருப்பதுடன், நடிகை ஆலியா பட் கரெக்டான சாய்ஸ் என ஏற்கனவே கூறியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு இருந்த உறுதியான குணம் ஆலியாவிடம் இருப்பதாகத் தெரிகிறது. அது செயற்கையாக இல்லாமல் உண்மையாக இருக்கிறது. அவரது படங்களை என் தங்கை பார்க்கும்போது பார்த்துள்ளேன். சிறு வயதில் நான் இருப்பது போன்று இருக்கிறார். இதை தங்கையிடம் கேட்டபோது உறுதிப்படுத்தினார்.
எனது வாழ்க்கை குறித்த கதையை படமாக்க நான் பிரியங்காவுக்கு அனுமதி தரவில்லை. ஏனென்றால் நான் அவரைத்தான் நடிக்க வேண்டும் என்று தேர்வு செய்யவில்லை.
இதுபற்றி சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் அவர் இதுவரை அளிக்கவில்லை. ஒருவேளை அவருக்கு என்னை சந்தித்து பேச நேரம் இல்லாமல் இருக்கலாம் என்றார்.
இந்நிலையில், தற்போது பிரியங்கா இப்படத்தில் நடிப்பார் என கூறப்பட்டுள்ளது. இப்படமானது இணையத்தில் ஒளிப்பரப்பு செய்யப்படும் என்றும் படத்தின் இயக்குநர் பேரி லெவின்சன் அறிவத்துள்ளார். நெட்ஃபிளிக்ஸில் டாக்குமெண்டரி படமாக உருவாகும் ஆனந்த ஷீலாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்துக்கு 'ஒயில்டு ஒயில்டு கண்ட்ரி' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிங்க: மேட்ரிக்ஸ் 4ஆம் பாகத்தில் இணைகிறாரா பிரியங்கா சோப்ரா?