சமீப காலங்களாக அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படங்களாக எடுத்துவருகின்றனர். இத்தகைய படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.
அந்த வரிசையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு சாய்னா எனப் பெயரிட்டுள்ளனர்.
அமேல் குப்தா இயக்கத்தில் வெளியாகும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை பர்னிதி சோப்ரா நடித்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தில் சாய்னாவாக நடித்துவந்த ஷரத்தா கபூர் விலகியதையடுத்து, பர்னிதி ஒப்பந்தம்செய்யப்பட்டார்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார் பதிவிட்ட ட்வீட்டில், "இந்தியாவின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான சாய்னாவின் கதையை மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் மக்களுக்கு வழங்குகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு 2018 செப்டம்பரில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற 'அமலா'!