ETV Bharat / sitara

ரன்பிர் இருந்தாலும் நானும் கெத்துதான் - 'அனிமல்' படம் குறித்த பரினீதி சோப்ரா - ரன்பிர் சிங்

எந்தவொரு நடிகரையும் போட்டியாக எடுத்துக்கொள்ளமாட்டேன் என நடிகை பரினீதி சோப்ரா தெரிவித்துள்ளார். அவர்களிடம் தேவையானவற்றை கற்றுக்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Parineeti and rqanbir kapoor
ரன்பிர் கபூர், பரினீதி சோப்ரா
author img

By

Published : Apr 18, 2021, 9:06 PM IST

ஹைதராபாத்: ரன்பிர் கபூர் இருந்தாலும் அனிமல் படத்தில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக எனது கதாபாத்திரம் இருக்கும் என்று நடிகை பரினீதி சோப்ரா கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான தி கேர்ள் ஆன் தி ட்ரெயின், சாய்னா, சந்தீப் அர் பிங்கி ஃபரார் உள்ளிட்ட படங்களில் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார் பரினீதி சோப்ரா.

இதையடுத்து தற்போது தெலுங்கு அர்ஜுன் ரெட்டி, இந்தி கபீர் சிங் படங்களை இயக்கிய சந்தீப் வங்கா ரெட்டி இயக்கும் அனிமல் என்ற படத்தில் ரன்பிர் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் அனிமல் படத்தில் ரன்பிர் மனைவியாக நடிக்கிறார் பரினீதி. அவரது அப்பாவாக அனில் கபூர் நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்து பரினீதி சோப்ரா கூறியதாவது:

அனிமல் படத்தில் ரன்பிர் இருந்தாலும் எனது கதாபாத்திரம் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும். எந்தவொரு நடிகரையும் போட்டியாக நான் எடுத்துக்கொள்ளமாட்டேன். மாறாக அவர்களிடம் தேவையானவற்றை கற்றுக்கொள்ளும் பழக்கம் உண்டு.

அந்த வகையில் நடிகர்கள் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், அர்ஜூன் கபூர், ரன்வீர் சிங், ஆயூஷ்மன் குர்ரானா என பலரும் எனது திறமை வெளிக்காட்ட தூண்டுதலாக இருந்துள்ளனர்.

இவர்களிடம் நடித்தபோது என்னிடம் இருக்கும் தனித்தன்மையை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டுகளை வாங்கியுள்ளேன். அதே போல் ரன்பிர் அழகுக்கு மத்தியில் எனது நடிப்பும் நன்கு கவனிக்கப்படும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: ’'அந்நியன்' என் உரிமை...என் படைப்பு’ - பதிலடி கொடுத்த ஷங்கர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.