ETV Bharat / sitara

அசத்தலான ஸ்டைலிஷ் உடையால் சோஷியல் மீடியாவில் ஹிட் அடித்த பிரியங்கா - நிக் ஜோடி! - லேட்டஸ்ட் சினிமா

மூன்றாம் ஆண்டு திருமண நாளை விரைவில் கொண்டாடவிருக்கும் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் ஜோடி, ஃபேஷன் விழாவில் கலந்துகொண்டு அசத்திய ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் ஜோடி
பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் ஜோடி
author img

By

Published : Nov 30, 2021, 3:39 PM IST

உலகின் டாப் மோஸ்ட் பேஷன் விழாக்களில் தவறாது கலந்துகொள்ளும் நிக் - பிரியங்கா ஜோடி, 2021அம் ஆண்டு பிரிட்டிஷ் பேஷன் விருதுகள் ( 2021 British Fashion Awards) நிகழ்வில் நேற்று (நவ.29) கலந்துகொண்டனர்.

அப்போது இருவரும் அசத்தலான உடைகளால் தனி கவனம் பெற்றனர். குறிப்பாக பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பிரம்மாண்ட உடையில் பிரியங்கா விழாவுக்கு வருகை தந்து அசத்தினார். இந்நிலையில், தங்களது புகைப்படங்களை நிக் தனதி இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

’ஸ்டார் ஆஃப் த ஷோ’ என குறிப்பிட்டு நிக் பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாக பிரியங்கா நெட்பிளிக்ஸின் ஜோனஸ் பிரதர்ஸ் பேமிலி ரோஸ்ட் (Jonas Brothers Family Roast) என்னும் நிகழ்ச்சியில் நிக் குடும்பத்தாருடன் கலந்து கொண்டார்.

மேலும், அடுத்தடுத்து மேட்ரிக்ஸ் 4 ( Matrix 4: Resurrections), டெக்ஸ்ட் ஃபார் யூ (Text For You) ஆகிய ஹாலிவுட் படங்களிலும் சிடடல் சீரிஸிலும் நடித்து வருகிறார். தவிர இந்திப் படமான ஜீலே சரா (Jee Le Zara)விலும் விரைவில் பணியாற்ற உள்ளார்.

இதையும் படிங்க: ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 83 ட்ரெய்லர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.