ETV Bharat / sitara

டப்பிங்கில் 'தி ஃபேமிலி மேன் 2' - மனோஜ் பாஜ்பாய்

author img

By

Published : Sep 13, 2020, 2:49 AM IST

மும்பை: 'தி ஃபேமிலி மேன்' இரண்டாவது சீசனுக்காக டப்பிங் செய்யத் தொடங்கியதாக நடிகர் மனோஜ் பாஜ்பாய் அறிவித்துள்ளார்.

தி ஃபேமிலி மேன்
தி ஃபேமிலி மேன்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பான தி ஃபேமிலி மேன் முதல் சீசனில் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் - பிரியாமணி ஆகியோர் பிரதான கேரக்டரில் நடித்திருந்தனர். ஆக்‌ஷன் கலந்த குடும்ப கதையாக அமைந்திருந்த இந்தத் தொடர் 10 பகுதிகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்தி மொழியில் வெளியான இத்தொடரின் இரண்டாவது சீசனில் சமந்தா பிரதான கேரக்டரில் நடித்துள்ளார். இதன் மூலம் சமந்தா வெப் சீரிஸில் அறிமுகமாகிறார்.

முதல் சீசனில், ஷரிப் ஹாஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் குமார் மற்றும் குல் பனாக் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இயக்குநர்கள் ராஜ் நிடிமோரு - கிருஷ்ணா டி.கே ஆகியோரால் இயக்கிய இந்தத் தொடர், தேசிய புலனாய்வு அமைப்பில் ரகசியமாக பணிபுரியும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனைப் பற்றிய கதையாகும்.

தி ஃபேமிலி மேனின் இரண்டாவது சீசனின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவு பெற்றது. தற்போது மனோஜ் பாஜ்பாய் இரண்டாவது சீசனுக்காக டப்பிங் இப்பணியை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து மனோஜ் பாஜ்பாய் ட்விட்டர் பக்கத்தில், 'தி ஃபேமிலி மேன் 2'டப்பிங்கில் என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.