கரோனா அச்சம் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இதனால் பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
ஹாலிவுட் மருமகள் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனுடன் லாஸ் ஏஞ்சலில் வசித்துவருகிறார். கரோனா தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து பிரியங்கா சோப்ரா வீட்டிலிருந்து வெளியே வராமல் உள்ளேயே இருந்துவந்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக நிக் ஜோனுடன் வீட்டில் உடற்பயிற்சி, பாடல், புகைப்படங்கள், பதிவு என சமூக வலைதளப்பக்கங்களில் பிசியாக இருந்தார்.
தற்போது இரண்டு மாதங்கள் கழித்து முகக்கவசத்துடன் லாஸ் ஏஞ்சல் நகரில் தான் வெளியே வந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
அதில், "கண்கள் ஒருபோதும் அமைதி கொள்ளவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக தற்போது வெளியே வந்துள்ளேன். முகக்கவசத்திற்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
- View this post on Instagram
Eyes are never quiet. #FirstDayOutIn2Months Thanks for the masks @avoyermagyan
">
சமீபத்தில் ஐ ஃபார் இந்தியா (I For India) என்னும் ஆன்லைன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதுமட்டுமல்லாது தனது கணவருடன் சேர்ந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கும் நன்கொடை வழங்கியுள்ளார்.
இந்த நெருக்கடி சமயத்திலும் பெண்கள் நலனுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.