கரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவரும் பாடகி கனிகா கபூர், தற்போது ஐந்தாவது முறையாக மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
பாலிவுட் பாடகி கனிகா கபூர் மார்ச் மாதம் லண்டனில் இருந்து இந்தியா வந்துள்ளார். அப்போது அவருக்கு கரோனாதொற்று இருந்துள்ளது. இதை மறைத்து அவர் லக்னோவில் உள்ள இரவு விருந்து ஒன்றில் கலந்துக்கொண்டார். இந்த விருந்திற்கு பல அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
கனிகா, கரோனா தொற்றை மறைத்து இதுபோன்று நிகழ்வுகளில் கலந்துக்கொண்டதால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர் தற்போது லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு 48 மணி நேரத்திற்கு ஒரு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம். கனிகாவிற்கு நான்கு முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து தற்போது ஐந்தாவது முறையாகவும் அவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து சஞ்சய் காந்தி மருத்துவமனையின் இயக்குநர் டி. திமான் கூறுகையில், பாடகி கனிகாவின் நிலைகுறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. நன்றாக இருக்கிறார் என்றார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
கரோனா பரிசோதனை குறித்து கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், உங்கள் அனைவரின் அன்பால் நான் படுக்கைக்குச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். என்னைகுறித்து நீங்கள் சிந்தித்தற்கு நன்றி. நான் ஐசியூவில் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். அடுத்த பரிசோதனை முடிவு எனக்குச் சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். எனது குழந்தைகளையும் குடும்பத்தையும் மிஸ்பண்ணுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கனிகாவ இனி கடவுள்தான் காப்பத்தனும் - நான்காவது டெஸ்ட் ரிசல்ட்டும் பாஸிடிவ்