ETV Bharat / sitara

நான் எல்லைக்கு போறேன்...நீங்க ஒலிம்பிக்கு போங்க: ட்விட்டர் பிரச்னையை முடித்த கங்கனா - கங்கன உடன் மோதிய அனுராக்

மும்பை: மஞ்சள் கலந்த பாலை குடித்துவிட்டு தூங்கச் செல்லுங்கள் என நடிகை கங்கனா, இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு அறிவுரை கூறி கருத்து மோதலை முடித்துள்ளார்.

கங்கனா
கங்கனா
author img

By

Published : Sep 18, 2020, 10:12 PM IST

பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் காரணமாகத்தான் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறி பல்வேறு முன்னணி பாலிவுட் பிரபலங்களுடன் கங்கனா ரணாவத் கருத்து மோதலில் ஈடுபட்டார்.

அதன்பின், பாலிவுட் மாஃபியாக்கள், பாலிவுட்டில் பயன்படுத்தப்படும் போதைப் பொருள்கள் என தொடர்ச்சியாக கங்கனா அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இதனைத் தொடர்ந்து, மும்பை காவல் துறை, மகாராஷ்டிரா மாநிலம், சிவசேனா கட்சி என அனைத்து தரப்பினரையும் கங்கனா கடுமையாக சாடத் தொடங்கினார்.

பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராக கங்கனா குரல் கொடுக்கத் தொடங்கிய நிலையில், தற்போது சிவசேனா-கங்கனா என முற்றி சமூக வலைதளங்களில் விவாதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில், மும்பை பந்த்ராவில் உள்ள கங்கனாவின் அலுவலகம், வீட்டின் பெரும்பகுதிகள் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மும்பை மாநகராட்சி ஆணையம் இடித்தது.

டாப்ஸி, ஸ்வரா பஸ்கர், ஜெயா பச்சன், ஊர்மிளா உள்ளிட்டவர்களின் விமர்சனத்துக்கு கங்கனா தக்க பதிலடி கொடுத்துவருகிறார். அந்தவகையில், தற்போது இயக்குநர் அனுராக் காஷ்யப் - கங்கனா இடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ஒரு போராளி. என்னுடைய தலையை கொய்வேனே தவிர யாருக்கும் சிரம்பணிய மாட்டேன். தேசத்தின் கௌரவத்திற்காக எப்போதும் குரல் கொடுப்பேன். மரியாதையோடும் சுயமரியாதையோடும் கௌரவத்தோடு தேசியவாதி என்ற பெருமையுடன் வாழ்கிறேன். என்னுடைய கொள்கைகளை எப்போதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டிருந்தார்

இந்தப் பதிவை பார்த்த அனுராக் காஷ்யப், "நீங்கள்தான் ஒரே மணிகர்ணிகா. நீங்கள் உங்களுடன் நான்கைந்து பேரை சேர்த்துக்கொண்டு போய் சீனாவை வீழ்த்திவிட்டு வாருங்கள். அவர்கள் நம் நாட்டில் எப்படி ஊடுருவி உள்ளார்கள் என்று பாருங்கள். நீங்கள் இங்கு இருக்கும் வரை நம் நாட்டை யாரும் தொட முடியாது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். உங்கள் வீட்டில் இருந்து எல்லைக்கு ஒருநாள் பயணம் தான். செல்லுங்கள் பெண் சிங்கமே ஜெய்ஹிந்த்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கங்கனா, "சரி நான் எல்லைக்குச் செல்கிறேன். நீங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லுங்கள். நாட்டுக்கு தங்கப்பதக்கங்கள் தேவை. ஒரு நடிகை என்ன வேண்டுமானாலும் செய்ய இது ஒன்றும் பி கிரேடு திரைப்படம் அல்ல. நீங்கள் உருவகப்படுத்தி பேசத் தொடங்கிவிட்டீர்கள். எப்போதிலிருந்து நீங்கள் இவ்வளவு முட்டாள் ஆனீர்கள். நாம் நண்பர்களாக இருந்தபோது நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருந்தீர்களே" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அனுராக், "உங்கள் வாழ்க்கை தான் உருவகமாக மாறிவிட்டது. இப்போது வரை அனைத்துமே உருவகமாகிவிட்டது. உங்கள் நடவடிக்கைகள் அனைத்துமே உருவகமாகிவிட்டது. ட்விட்டரில் பல உருவங்களை நீங்கள் உருவாக்கிவிட்டீர்கள்.

வேலைவாய்ப்பின்மை உருவாக்கியவர் தான் உங்கள் வசனகர்த்தா என்று மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். நீங்கள் எப்படி உருவகப்படுத்துவீர்கள் என்பது மற்றவர்களை விட எனக்கு நன்றாகவே தெரியும்" என்றார்.

இதற்கு கங்கனா, "நீங்கள் சங்கடமான நிலையில் இருப்பதை நான் காண்கிறேன். இதில் எந்த அர்த்தமும் இல்லை. இதை மோசமாக நான் விரும்பவில்லை. நான் பின் வாங்கிக் கொள்கிறேன். தயவுசெய்து மோசமாக உணர வேண்டாம். மஞ்சள் கலந்த பாலை குடித்துவிட்டு தூங்கச் செல்லுங்கள். நாளை புதிய நாளாக அமையட்டும்" எனக் கருத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கங்கனா தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.