ETV Bharat / sitara

கங்கனா ரணாவத்திற்கு Y பிளஸ் பாதுகாப்பு! - கங்கனா ரனாவத் மத்திய அரசு பாதுகாப்பு

மும்பை: நடிகை கங்கனா ரணாவத்திற்கு மத்திய அரசு 'Y பிளஸ்' பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
author img

By

Published : Sep 7, 2020, 4:29 PM IST

Updated : Sep 7, 2020, 5:09 PM IST

கங்கனா ரணாவத் தற்போது தனது சொந்த ஊரான ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அங்கிருந்தவாறே சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு நீதி, பாலிவுட்டில் போதைப் பொருள்களின் பயன்பாடு, வாரிசு அரசியல், பாலிவுட்டில் நிழல் உலக தாதாக்களின் செயல்பாடுகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தும், குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வருகிறார்.

தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துகளை கங்கனா ரணாவத் பகிர்ந்து வந்த நிலையில், அவருக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா, ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆகிய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாது கங்கனாவுக்கு எதிராக மும்பை, தானே, பால்கர், புனே, அவுரங்காபாத், நாசிக் உள்ளிட்ட பல நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

பால்கர் சாதுக்கள் கொலை சம்பவம் குறித்து, "மும்பை, ரத்தத்திற்கு அடிமையாகி உள்ளது" என முன்னதாக சர்ச்சைக்குரிய கருத்தை கங்கனா தெரிவித்திருந்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தை கங்கனா அவமானப்படுத்தி விட்டார். அவர் மும்பைக்கு திரும்ப வேண்டாம் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

  • ये प्रमाण है की अब किसी देशभक्त आवाज़ को कोई फ़ासीवादी नहीं कुचल सकेगा,मैं @AmitShah जी की आभारी हूँ वो चाहते तो हालातों के चलते मुझे कुछ दिन बाद मुंबई जाने की सलाह देते मगर उन्होंने भारत की एक बेटी के वचनों का मान रखा, हमारे स्वाभिमान और आत्मसम्मान की लाज रखी, जय हिंद 🙏 https://t.co/VSbZMG66LT

    — Kangana Ranaut (@KanganaTeam) September 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
அதற்கு பதில் அளிக்கும் விதமாக, "கங்கனா செப்டம்பர் 9ஆம் தேதி நான் மும்பைக்கு வர முடிவெடுத்துள்ளேன். மும்பை விமான நிலையத்திற்கு நான் வந்தடையும் நேரத்தை பதிவிடுகிறேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கங்கனா ரணாவத்தின் தந்தை ஹிமாச்சல் பிரதேச மாநில முதலமைச்சரிடம், மும்பை செல்லும் தனது மகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இவரது கோரிக்கையை ஹிமாச்சலப் பிரதேச அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. தற்போது அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கங்கனாவிற்கு 'Y Plus' பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கங்கனா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Last Updated : Sep 7, 2020, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.