டெல்லி: ஐஸ்வர்யா ராய் தனது மகளின் 9ஆவது பிறந்தநாளையொட்டி வாழ்த்து மடல் எழுதி, புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா - அபிஷேக் தம்பதியின் மகள் ஆராத்யா தனது 9ஆவது பிறந்தநாளை நவம்பர் 16ஆம் தேதி கொண்டாடினார். பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் தனது பேத்திக்கு வாழ்த்துகளை பதிவு செய்திருந்தார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் தனது செல்லக்குட்டி ஆராத்யாவை வாழ்த்தி ஒரு பதிவிட்டுள்ளார்.
கணவர் அபிஷேக் மற்றும் தனது குழந்தை ஆராத்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா, என் வாழ்வின் முழுமையான காதல் நீ, என் தேவதை ஆராத்யா உனக்கு இனிய 9ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள். உன்னை எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஆழமாக நேசிக்கிறேன். கடவுளுக்கு நன்றி; என் மூச்சு உனக்காக உள்ளவரை, லவ் யூ என குறிப்பிட்டுள்ளார்.