இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் தோனியின் இரண்டாவது இன்னிங்ஸிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த 16 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் தோனி படைத்த சாதனைகளுக்காக ரசிகர்கள் #ThankyouDhoni என்ற ஹேஷ்டேக்கில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஹெலிகாப்டர் தரையிறங்கினாலும், சவாரி செய்த அனுபவம் மறக்க முடியாததாக இருக்கும். மறக்க முடியாத நினைவுகளை எங்களுக்கு தந்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் கூலான மனிதர்தான், உங்கள் வாழ்வு சிறக்க என் வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">