அமேசான் ப்ரைமில் 2019ஆம்ஆண்டு ஒளிபரப்பான 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தத் தொடரில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் - பிரியாமணி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தேசிய புலனாய்வு அமைப்பில் ரகசியமாகப் பணிபுரியும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனைப் பற்றிய ஆக்ஷன் கலந்த குடும்பக் கதையாக அமைந்திருந்த இந்தத் தொடர், 10 பகுதிகளாக ஒளிபரப்பாகியது.
இந்தியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டாலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. தற்போது இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது சீசனில் சமந்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் சமந்தா வெப் சீரிஸில் அறிமுகமாகிறார். முதல் சீசனை இயக்கிய இயக்குநர்கள் ராஜ் நிடிமோரு - கிருஷ்ணா டி.கே ஆகியோரே இரண்டாவது சீசனையும் இயக்கியுள்ளனர். இந்த தொடர் அமேசான் ப்ரைமில் ஜூன் 4ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
-
Hope you like ♥️#TheFamilyManOnPrime trailer out now.https://t.co/xRkRkFAiab@SrikantTFM @PrimeVideoIN @rajndk @BajpayeeManoj @Priyamani6 @sharibhashmi @sumank @Suparn @shreya_dhan13 @hinduja_sunny @DarshanKumaar @SharadK7 @ishahabali pic.twitter.com/Xqrla0ifFr
— Samantha Akkineni (@Samanthaprabhu2) May 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hope you like ♥️#TheFamilyManOnPrime trailer out now.https://t.co/xRkRkFAiab@SrikantTFM @PrimeVideoIN @rajndk @BajpayeeManoj @Priyamani6 @sharibhashmi @sumank @Suparn @shreya_dhan13 @hinduja_sunny @DarshanKumaar @SharadK7 @ishahabali pic.twitter.com/Xqrla0ifFr
— Samantha Akkineni (@Samanthaprabhu2) May 19, 2021Hope you like ♥️#TheFamilyManOnPrime trailer out now.https://t.co/xRkRkFAiab@SrikantTFM @PrimeVideoIN @rajndk @BajpayeeManoj @Priyamani6 @sharibhashmi @sumank @Suparn @shreya_dhan13 @hinduja_sunny @DarshanKumaar @SharadK7 @ishahabali pic.twitter.com/Xqrla0ifFr
— Samantha Akkineni (@Samanthaprabhu2) May 19, 2021
ட்ரெய்லரில் மனோஜ் பாஜ்பாய் மும்பையிலிருந்து குடும்பத்தினருடன் சென்னையில் வசிக்கஆரம்பிக்கிறார். அங்கிருந்தே தனது புலனாய்வுப் பணியைத் தொடங்குகிறார். 'தி ஃபேமிலி மேன் 2' ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதில் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கும் எல்டிடிஇ குழுவுக்கும் தொடர்பு இருப்பது போல் காட்சிகளும் வசனங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சமந்தா எல்டிடிஇ குழுவினரின் சீருடை போன்ற உடையை அணிந்திருப்பது, அவர்கள் அனைவரையும் கொல்லுவேன் என்ற வசனம், ட்ரெய்லரின் சில காட்சிகளில் இலங்கை வரைபடம் போன்றவை சர்ச்சையை மேலும் பெரிதாக்கியுள்ளது.
இந்தத் தொடர் தமிழர்களை வேண்டுமென்ற தவறாக சித்தரிப்பதாக சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, இந்தத் தொடரை தடைசெய்யவேண்டும் என '#FamilyMan2_against_Tamils' என்ற ஹேஷ் டேக்கை நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.