ETV Bharat / sitara

நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் என்னை சார்ந்ததே - 'ஷெர்னி' வித்யாபாலன் - ஷெர்னி

புது டெல்லி : ஒவ்வொரு படத்திற்கும் ஒப்பந்தம் செய்யும்போது நான் இந்தப்படம் பார்வையாளர்கள் பார்க்க விரும்பும் படம் தானா என்பதை மட்டும் சிந்திப்பேன் என வித்யாபாலன் கூறியுள்ளார்.

ஷெர்னி
ஷெர்னி
author img

By

Published : Aug 13, 2020, 4:39 PM IST

தனக்கான மார்கெட்டை இழக்காமல் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் பாலிவுட் நடிகை வித்யா பாலன். முன்னதாக, கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய 'சகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து அமித் மசூர்கர் இயக்கும் 'ஷெர்னி' எனும் புதிய படத்தில் வித்யாபாலன் தற்போது நடிக்க உள்ளார். ஆஷ்தா டிகு திரைக்கதை எழுதும் இப்படத்தை பூஷன் குமார், கிரிஷன் குமார், அமித் மசூர்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படம் குறித்து சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த வித்யாபாலன், நான் என்னை ஒரு கிளர்ச்சியாளராகப் பார்க்கவில்லை. மக்களால் எதிர்பார்க்கப்படுவதை எதிர்த்து நாம் ஒன்று செய்தால் அவர்கள் நம்மை கிளர்ச்சியாளர்கள் என்று முத்திரை குத்துகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு நான் என் மனக் குரலை பின்பற்றத் தொடங்கினேன். அது மிகவும் எளிதான ஒன்று அல்ல. எனக்கு இது சரியான செயல் என்று தோன்றும்போது என் மனக் குரல் அதை எதிர்த்து நிற்கும். நான் செய்ய விரும்புவதையே செய்து வருகிறேன். நான் தேர்வு செய்யும் ஒவ்வொரு முடிவும் என் தனிப்பட்ட முடிவு. அதை நான் யாரிடமும் விவாதிக்க மாட்டேன். முடிவெடுக்கும் நேரத்தில் நான் எப்போதும் என்னைச் சார்ந்து இருக்கிறேன்.

நான் ஒவ்வொரு படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்படும்போது, மக்கள் என்னை சிறந்த முறையில் திரையில் பார்க்க வேண்டும் என்றே விரும்புவேன். இதற்காகதான் நான் கடினமாக உழைக்கிறேன். நான் திரையுலகிற்கு வந்த புதிதில், சில தவறான காரணங்களுக்காக படங்கள் செய்துள்ளேன். அது ஒரு சித்திரவதைதான். அதை மக்கள் ஆதரிக்கவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

பார்வையாளர்களுக்கு எது பிடிக்கும், என்ன விரும்புவார்கள் என்று கூறுவது மிகவும் கடினம். முதலில் ஒரு பார்வையாளனாக எனக்குக் கதை பிடிக்க வேண்டும். அவ்வாறெனில்தான் பார்வையாளர்களும் அதை விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்.

'ஷெர்னி' படப்பிடிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். கோவிட்-19 சூழ்நிலை நிச்சயம் ஒரு நாள் மாறும். அதன் பின்னரே எங்களால் படப்பிடிப்பைத் தொடங்க முடியும். சகுந்தலா தேவி படத்தை மக்கள் ஆதரிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது அன்பின் வெளிப்பாடு நான் மிகவும் நன்றியுள்ளவளாக உணர்கிறேன்” எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.