பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் இன்று சப்பாக் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆசிட் வீச்சு பாதிப்புக்குள்ளான லக்ஷ்மி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும் வரிச்சலுகை அளித்துள்ளன.
இந்த நிலையில், நடிகை தீபிகா படுகோனே தனது படம் இன்று வெளியானதையொட்டி, புகழ்பெற்ற மும்பை சித்தி விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
பாரம்பரியமான வெள்ளை நிற உடை அணிந்து வந்திருந்த தீபிகா படுகோனே, சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு விநாயகரை தரிசித்தார்.
முன்னதாக தீபிகா தனது கணவர் ரன்வீர் சிங் உடன் கடந்த புதன்கிழமை சப்பாக் படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார். இன்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் தீபிகாவைப் பாராட்டி வருகின்றனர். படம் மீது நேர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதால் தீபிகா உற்சாகமடைந்துள்ளார்.
'அமைதியை விரும்பும் நான் வன்முறையை ஆதரிக்க மாட்டேன்' - சன்னி லியோன்