லக்னோ: கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர் மீது இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 182, 269, 270 ஆகிய பிரிவுகளில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர் மீது ஹஸ்ராத்கன்ஜ், கேம்டிநகர் காவல் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காவல் நிலையங்களுக்குள்பட்ட எல்லைக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளராம்.
கனிகா கபூருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறாமல் பொது இடங்களுக்குச் சென்றிருப்பதால் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள கனிகா கபூர், "கடந்த நான்கு நாள்களாக எனக்கு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து நான் பரிசோதனை மேற்கொண்டபோது எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நானும் எனது குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். மேலும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுவருகிறோம்.
அதேபோல் 10 நாள்களுக்கு முன்னர் நான் வீட்டுக்கு வருவதற்கு முன் விமான நிலையத்தில் நடைபெற்ற வழக்கமான பரிசோதனையையும் மேற்கொண்டேன். ஆனால் கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர்தான் கரோனா குறித்த அறிகுறி தென்பட்டது.
கரோனா அறிகுறிகள் எதுவும் தென்பட்டால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சுயபரிசோதனை செய்துகொள்ளமாறு இந்த நேரத்தில் வலியுறுத்துகிறேன். தற்போது எனக்கு லேசான காய்ச்சலுடன் உடல்நிலை பரவாயில்லாமல் உள்ளது. நம்மைச் சுற்றி இருப்பவர்களை மனதில் வைத்து நியாயம்மிக்க குடிமக்களாக நடந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
லண்டனிலிருந்து விமானம் மூலம் மும்பைக்கு வந்த பாடகி கனிகா கபூர், லக்னோ நகரில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், மூன்று விருந்து நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டதாக அவரின் தந்தை தெரிவித்திருந்தார்.
இதனிடையே விமான நிலையத்தில் அனைவருக்கும் மேற்கொள்ளும் அடிப்படை கண்டறிதல் சோதனையை கனிகா கபூர் தவிர்த்தார் என்ற தகவல் வெளியான நிலையில், பலரும் அவரை சமூக வலைதளங்களில் காய்ச்சியெடுத்தனர். இதைத்தொடர்ந்து தற்போது தனது உடல்நிலை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்