ETV Bharat / sitara

எதிர்பார்த்ததை விட பலமடங்கு கூடுதலாக நிதி திரட்டிய 'விருஷ்கா'

மும்பை: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா கரோனா நிவாரண நிதிக்காக ரூ. 11 கோடிக்கும் மேல் திரட்டியுள்ளனர்.

Anushka
Anushka
author img

By

Published : May 14, 2021, 7:58 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை கொடூரமாகத் தாக்கி வருகிறது. நாள்தோறும் அதிகளவில் பாதிக்கப்பட்டும் இறந்தும் வருகின்றனர். இந்தியா படும் சிரமங்களைப் பார்த்து பல்வேறு நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. மேலும் பல பிரபலங்களும் தொண்டு நிறுவனங்களும் கரோனா நிவாரண நிதியை வழங்குகின்றன.

அந்த வகையில், கெட்டோ எனும் சமூக வலைதளத்தின் மூலம் #InThisTogether என்ற நிதி திரட்டும் திட்டத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தொடங்கினர். கரோனா நிவாரண நிதியாக முதலில் ரூ.7 கோடி திரட்ட முடிவு செய்தனர். அதில் முதல்கட்டமாக தங்கள் பங்களிப்பாக ரூ. 2 கோடியை வழங்கினர். அதன் பின் ரூ. 11 கோடியை நிவாரண நிதியாக திரட்ட நட்சத்திர தம்பதி முடிவு செய்தது.

  • Words fall short to express how overwhelmed we feel to have exceeded our target not once, but twice, thanks to each one of you. To everyone who has donated, shared, & helped in any way, I want to say a big thank you. We are #InThisTogether & we will overcome this together. pic.twitter.com/M7NeqDc532

    — Virat Kohli (@imVkohli) May 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், இந்த தம்பதி தற்போது ரூ. 11 கோடியே 39 லட்சத்து 11ஆயிரத்து 820யைத் திரட்டியுள்ளனர். இதுகுறித்து இந்த ட்வீட் செய்துள்ள விராட் கோலி, "எங்கள் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. நாங்கள் எதிர்பார்த்ததை விட பலமடங்கு கூடுதலாக நிதி திரட்டப்பட்டுள்ளது.

நிதி அளித்த, நிதி திரட்டும் செய்தியை பகிர்ந்த ஒவ்வொருக்கும் எங்களது நன்றி. நாம் எல்லோரும் இந்த இக்கட்டான சூழலில் ஒன்றாக இருந்து இதனைச் சமாளிப்போம்" எனத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.