ETV Bharat / sitara

ட்விட்டர், திரைப்படங்களில் மரணத்தை கணித்த சுஷாந்த்!

author img

By

Published : Jun 20, 2020, 10:40 AM IST

சுஷாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள், நடித்த படங்கள் அவரது மரணத்தை முன்னரே அவர் கணித்ததை குறித்து ஆராய்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...

sushant singh rajput predicts death
sushant singh rajput predicts deathsushant singh rajput predicts death

சுஷாந்த் சிங்கின் வாழ்க்கையை முன்பே கணிக்கப்பட்ட ஒரு மரணத்தின் கதையாகப் பார்க்கலாம். 1889ஆம் ஆண்டில் வின்சென்ட் வான் கோக் தனது காதை சிதைத்துக்கொண்ட பின் வரைந்த புகழ்பெற்ற 'தி ஸ்டாரி நைட்' (The Starry Night) படத்தை சுஷாந்த் தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படமாக வைத்திருந்தார்.

அவரது இன்ஸ்டாகிராமின் இறுதிப் பதிவில், 2002ஆம் ஆண்டில் காலமான அவரது அன்புக்குரிய தாயின் படத்துடன், கடந்த காலம், கண்ணீர்த் துளிகளால் முடிவற்ற கனவுகள், பரபரப்பான இந்த வாழ்க்கை, இருவருக்கும் இடையிலான சொல்லாடல் என்று பதிவிட்டிருந்தார்.

அனைவருக்கும் 34 வயதில் தற்கொலை எண்ணம் இருக்காது. ஆனால் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்ட சுஷாந்துக்கு அந்த எண்ணம் இருந்தது. அது மட்டுமல்ல, 2013இல் 'கை போ சே' திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து அவர் நடித்த 11 படங்களில் ஐந்து படங்களில் திரையில் அவர் இறந்துபோவதாகக் காண்பிக்கப்பட்டது.

sushant singh rajput predicts death
சுஷாந்த் சிங் ராஜ்புட்

சேதன் பகத்தின் 'The 3 Mistakes of My Life' கதையை அடிப்படையாகக் கொண்ட 'கை போ சே' படத்தில் கவர்ந்திழுக்கும் இணக்கமான இஷான் கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த் சூரிய மறைதல் பின்னணியில் நடந்துவருவது அவரது நலம் விரும்பும் நண்பரான அலி ஹாஷ்மி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகையில் மகிழ்ச்சியடையும்போது ஒரு இணக்கமான நடிகனாக காட்டப்பட்டிருப்பார்.

இயக்குநர் அபிஷேக் கபூர், இஷான் கதாபாத்திரத்தின் மரணத்தை ஒரு உணர்வுப்பூர்வமான முடிவாக மாற்றி எடுத்தார். படத்தின் மிகவும் நேசிக்கப்பட்ட கதாபாத்திரத்தின் மரணம் மூலமாக கோத்ரா ரயில் வன்முறையையும், குஜராத் கலவரத்தின் காட்டுமிராண்டித்தனத்தையும் காட்டுவது என்பது கபூரின் தனி பாணியை காட்டுகிறது.

தினேஷ் விஜன் இயக்கிய 'ராப்தா' (2017) என்னும் மறுபிறவி குறித்த படத்தில், அவரது கதாபாத்திரங்களில் ஒன்றில் இறந்துவிடுவார். மற்றொரு கதாபாத்திரமான சிவ் கக்கர், நீரில் மூழ்குவதிலிருந்து ஒரு சிறுமியால் காப்பாற்றப்படுவார். உத்தரகாண்ட் மாநிலத்தில் 2013 வெள்ளத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட கேதர்நாத் (2018) படத்தில், இஸ்லாமியராகத் தோற்றும் அவர் சுற்றுலா வழிகாட்டியாக நடித்திருப்பார். அதில் அவர் கோயில் பூசாரியின் மகளைக் காதலிப்பார். அவரை காப்பாற்றுவதற்காகப் புறப்படும் ஹெலிகாப்டரில் தனது இடத்தை நழுவ விட்டுவிடுவார். இறுதிக் காட்சியில், அவர் பூமியால் விழுங்கப்படுவதற்கு முன்பு, அவருக்கு பிடித்த நடிகர் ஷாருக்கானைப்போலவே, அவரது கைகளை நீட்டிய காட்சியை இப்போது உண்மையான அவரது மரணத்திற்குப் பிறகு பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.

அபிஷேக் சௌபே படமாக்கிய கொள்ளையர்கள் குறித்த 'சோஞ்சிரியா' திரைப்படத்தில் (2019), அவர் நடித்த லக்னா கதாபாத்திரம், தனது பரம எதிரியாக நடித்த அசுதோஷ் ராணாவிடம் வீரமரணம் அடைய ஒரு மரத்தின் பின்னால் தனது மறைவிடத்திலிருந்து வேண்டுமென்றே வெளியேறிவருவார். “படத்தின் லக்னா கதாபாத்திரம் அவரது (சுஷாந்த்) வாழ்க்கை குறித்த மற்றொரு பார்வை கொண்ட அந்தத் தருணம், தற்போது எனக்கு முற்றிலும் மாறுபட்ட பொருளை உணர்த்துகிறது" என்று அவரது மரணத்திற்குப் பிறகு ஒரு நேர்காணலில் சௌபே கூறினார்.

சுஷாந்த் கடைசியாக நடித்த 'சிச்சோர்' திரைப்படத்தில், அவரது மகன் நூலிழையில் மரணத்திலிருந்து தப்பிப்பார், இப்போது வைரலாகிவிட்ட அந்தக் காணொலியில் சுஷாந்த், ''ஹமாரா ரிசல்ட் நஹின் டிசைட் கர்த்தா கி தும் லாசர் ஹை கி நஹின், துமாரி கோஷிஷ் டிசைட் கர்த்தி ஹை (நாம் தோல்வியுற்றவரா இல்லையா என்பதை முடிவு தீர்மானிக்காது, நமது முயற்சியே தீர்மானிக்கும்)” என்று ஒரு தந்தையாக மகனிடம் கூறுவார். அந்த வார்த்தையில் அவர் வாழ்ந்திருக்க வேண்டும்.

sushant singh rajput predicts death
தில் பெச்சாரா

அவர் நடித்த கடைசி படத்தில் மகிழ்ச்சியான முடிவை எதிர்பார்க்கிறவர்கள் மீண்டும் ஏமாற்றமடைவார்கள். 'The Fault in Our Stars' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக, OTTயில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 'தில் பெச்சாரா' படத்தில் நடித்துள்ள சிறுவன், சிறுமி இருவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சிறுவனின் மரணம் எதிர்பாராதது என்றாலும் படத்தின் பெரும்பகுதியில் அந்தச் சிறுமி நோயால் மோசமாக பாதிக்கப்பட்டவராக காட்டப்பட்டிருப்பார்.

சினிமாவில் மரணங்கள் பார்வையாளர்களைக் கவர்வதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். ஷாருக் கான், அமிதாப் பச்சன் இருவரின் வாழ்க்கையும் அதற்குச் சான்றாகும். ஷாருக் கான் தனது 17 திரைப்படங்களில் திரையில் இறந்திருப்பார்.

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'தீவார்' (1975) படத்தில் தாயின் மடியில் கடைசியாக மூச்சுவிடுவது முதல் 'தேவதாஸ்' (2002) படத்தில் ஷாருக் கானும், பார்வதியாக நடித்த ஐஸ்வர்யா ராயும் ஹவேலியின் வாயில்களை நோக்கி ஓடுகையில் அவரது சேலை முந்தானை அவருக்கு பின்னால் பறக்கும் மரணத்தருவாய் வரை அந்த வியக்கத்தக்க காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும். அவற்றில் நடிந்திருந்த கதாபாத்திரங்கள் வாயிலாக அமிதாப் பச்சனும் ஷாருக் கானும் ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்டார்கள்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் ஒரு திறமையான மனிதர், அவரால் சுவாமி விவேகானந்தரை மேற்கோள்காட்டும் அளவுக்கு வானியற்பியலாளர்களையும் எளிமையாக மேற்கோள்காட்ட முடியும். ஷியாமக் தாவரின் குழுவில் ஒரு பின்னணி நடனக் கலைஞராகப் பயணத்தை தொடங்கிய அவர், வேதனை, போராட்டம் என அனைத்தையும் அறிந்திருந்தார்.

அக்டோபர் 2019ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தீமையை ஜெயிப்பதன் மூலம் அதைக் குறைக்கிறோம் என்று மேற்கு உலகம் கூறுகிறது. தீமையை துன்பத்தால் அழிக்கிறோம் என்று இந்தியா கூறுகிறது. தீமை என்பது நேர்மறையான இன்பத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

இரண்டு எண்ணங்களும் வேவ்வேறாக தோன்றினாலும் இலக்கு என்பது ஒன்றுதான். அவரது மகத்தான வாழ்க்கையை பின்பற்றிச் செல்வோம், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வோம்" எனப் புகழ், வாழ்க்கையின் நிரந்தரத்தன்னை குறித்து சுஷாந்த் அறிந்திருந்தார்.

sushant singh rajput predicts death
சுஷாந்த் சிங் ராஜ்புட்

'நிழலைப் போலவே நான், ஆனால் அது நான் இல்லை' என்று பெர்ஷிய கவிஞர் ரூமியை மேற்கோள்காட்டி, டிசம்பர் 2018இல் சுஷாந்த் ட்விட்டர் பதிவு ஒன்றைப் பகிர்ந்தார். கைவிடப்பட்ட படங்கள், மீறப்பட்ட வாக்குறுதிகள், இழந்த வாய்ப்புகள் போன்றவற்றை தன் மனத்தில் வைத்து அதனை அவர் முன்னரே அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க...சுஷாந்த் சிங் நினைவில் வாடும் வளர்ப்பு நாய் ஃபட்ஜ் - நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.