பாலிவுட் மெகா ஸ்டார் அமித்தாப் பச்சன், ரன்பீர் கபூர், அலீயா பட், மௌனி ராய், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'பிரம்மாஸ்த்ரா'. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்குகிறார். ஹிரோ யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், அபூர்வா மேத்தா, நமித் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.
அந்நியன், ராவணன் படங்களின் ஒளிப்பதிவாளர் வேலாயுதம் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.
'பிரம்மாஸ்திரா' படம் மூன்று பாகங்களாக உருவாகும் நிலையில், இதன் முதல் பாகத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும்நிலையில், தற்போது படக்குழு இமாச்சலப் பிரதேச மாநிலம் மாணலியில் முகாமிட்டுள்ளது.
குளுகுளுவன வெண்பனி மலையில் நடைபெறும் படப்பிடிப்புக்காக பிலாஸ்பூர் சர்கியூட் ஹவுஸில் தங்கியுள்ள நடிகர்கள் அமித்தாப் பச்சன், ரன்பீர் ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கடும் குளிரைத் தாங்கும் ஜாக்கெட் உள்ளிட்டவற்றை அணிந்து நிற்கும் அமிதாப், ரன்பீர் ஆகியோரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
-
T 3567 - ..minus degrees ..err like -3 .. protective gear .. and the work etiquette .. pic.twitter.com/EdB3maKZpA
— Amitabh Bachchan (@SrBachchan) December 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">T 3567 - ..minus degrees ..err like -3 .. protective gear .. and the work etiquette .. pic.twitter.com/EdB3maKZpA
— Amitabh Bachchan (@SrBachchan) December 1, 2019T 3567 - ..minus degrees ..err like -3 .. protective gear .. and the work etiquette .. pic.twitter.com/EdB3maKZpA
— Amitabh Bachchan (@SrBachchan) December 1, 2019
பிரம்மாஸ்திராவின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்புகள் ஏற்கனவே பல்கேரியா, நியூயார்க், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
மதிமயக்கும் மாயக்காரி 'ஐஸ்வர்யா ராஜேஷ்' - புகைப்படத்தொகுப்பு