ETV Bharat / sitara

’குழந்தைத்தனம் கொண்ட அமிதாப் பச்சன்’ - ஆயுஷ்மான் குரானா - அமித்தாப் குறித்து ஆயுஷ்மான்

மும்பை: ’குலாபோ சிதாபோ’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன் உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

Ayushmann
Ayushmann
author img

By

Published : Jun 11, 2020, 6:02 PM IST

அமித்தாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா இருவரும் இணைந்து நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் ’குலாபோ சிதாபோ’. இந்த திரைப்படத்தை ஏப்ரல் 17ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஆனது.

இதையடுத்து வெளியிட முடியாமல் இருக்கும் திரைப்படங்கள், அமேசான் ப்ரைம் போன்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிவருகின்றன. அந்த வகையில் ‘குலாபோ சிதாபோ’ திரைப்படமும் அமேசான் ப்ரைமில் நாளை (ஜூன் 12) வெளியாகிறது.

இந்நிலையில், குலாபோ சிதாபோ படத்தில் மூத்த பாலிவுட் நடிகரான அமித்தாப் பச்சன் உடன் இணைந்து நடிந்த அனுபவம் குறித்து ஆயுஷ்மான் குரானா கூறுகையில், “அமித்தாப் பச்சனை முதலில் பார்த்தபோது மிகவும் சீரியஸான நபர் என்றே நினைத்தேன். ஆனால், அவர் அப்படி இல்லை. அவருக்குள் ஒரு குழந்தைத்தனம் உள்ளது. அது இன்னும் உயிர்ப்புடன் இருப்பதால்தான், ஒரு அற்புதக் கலைஞராக இன்றைக்கும் திகழ்கிறார்.

Ayushmann
”குலாபோ சிதாபோ” படத்தில் அமிதாப் உடன் ஆயுஷ்மான் குரானா

படப்பிடிப்பு தளத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பார் என நினைத்தேன். ஆனால், அதற்கு மாறாக அவர் மிகவும் ஜாலியாக இருந்தார். தன்னுடைய நடிப்பின் மீது மட்டும் அக்கறை எடுத்துக்கொண்டு சுயநலமாக இல்லாமல், உடன் பணிபுரியும் மற்ற நடிகர்களுடன் கலந்தாலோசித்து, அனைவருக்கும் ஒத்துழைப்பு வழங்கினார்” என்றார்.

இதையும் படிங்க:குடிபெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அமிதாப் பச்சன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.