ஜெய்சல்மர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் தங்கள் படப்பிடிபுக்காக பிஸி ஷெட்யூலில் இருக்கும் அக்ஷய் - கிரிட்டி இருவரும் அங்கு நடைபெற்ற மாரத்தான் (Vijay Run for Soldier Marathon) போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
1949 ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவத்துக்கு பிரிட்டிஷிடம் இருந்து முழு சுதந்திரம் கிடைத்தது. இந்த நாளை நினைவுகூறும் வகையில் இன்று தேசிய ராணுவ தினம் அனுசரிக்கப்படுகிறது. கே எம் கரியப்பா இந்த நாளில்தான் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றார்.
இதை முன்னிட்டு ராணுவ வீரர்கள் சார்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ‘பச்சன் பாண்டே’ படப்பிடிப்புக்காக ஜெய்சல்மரில் இருக்கும் அக்ஷய் - கிரிட்டி இருவரும் இதில் கலந்துகொண்டு, மாரத்தான் போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அக்ஷய் குமார் ராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடி மகிழ்ந்தார்.