நாட்டில் கரோனா 2ஆவது அலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உண்ண உணவின்றி பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் அர்ஜுன் கபூரும் அவரது தங்கை அன்ஷுலாவும் இணைந்து 30,000 குடும்பங்களுக்கு, ஒரு கோடி ரூபாய் அளவில் பணம், உணவுப் பொருள்கள் கொடுத்து உதவிசெய்துள்ளனர்.
இது குறித்து அர்ஜுன் கபூர் கூறுகையில், “குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பணம், உணவு கொடுத்து உதவிசெய்துள்ளோம். இதுவரை 30,000 குடும்பங்களுக்கு உதவியுள்ளோம்.
மேலும் கரோனாவை எதிர்த்துப் போராட அவர்களுக்கு ஒரு சிறிய அளவில் உதவியது மகிழ்ச்சியளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.