ETV Bharat / sitara

அர்ஜுன் கபூரின் காதலியான ரகுல் பிரீத் சிங் - 'மார்ஜவான்' திரைப்படம்

தென்னிந்திய மொழிகளைத் தொடர்ந்து இந்தியில் கால்பதித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், இந்த ஆண்டில் இரண்டு படங்கள் நடித்து முடித்துள்ள நிலையில், மூன்றாவது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அர்ஜுன் கபூர் - ரகுல் ப்ரீத் சிங்
author img

By

Published : Nov 7, 2019, 8:54 AM IST

மும்பை: இந்த ஆண்டின் மூன்றாவது இந்திப் படத்தில் கமிட்டாகியுள்ள ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் காதலியாக மாறியுள்ளார்.

பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை காஷ்வி நாயர் இயக்குகிறார். நடிகர் ஜான் ஆபிரகாம், பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார்.

Arjun Kapoor
Arjun Kapoor

படத்திலுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே படத்தின் ஷுட்டிங் இந்த மாதம் தொடங்கவுள்ளது.

காதலுடன் தன்னைப் பார்க்கும் ரகுல் ப்ரீத் சிங் தோள்களைப் பின்னாலிருந்து அணைத்தவாறு அர்ஜுன் கபூர் நிற்கும் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

1761ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரை அடிப்படையாகக் கொண்டு அர்ஜுன் கபூர் நடித்துள்ள 'பானிபட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அர்ஜுன் கபூரின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Arjun Kapoor and Rakul preer singh paired for new movie
புதிய படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங் - அர்ஜுன் கபூர்

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம்வரும் ரகுல் ப்ரீத் சிங் இந்த ஆண்டில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து 'தீ தீ பியார் தீ' என்ற படத்தில் நடித்தார். கவர்ச்சிகரமாக அமைந்திருந்த அவரது வேடம் பேசப்பட்டது.

இதையடுத்து ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ள 'மார்ஜவான்' என்ற ரொமாண்டிக் ஆக்‌ஷன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நவம்பர் 8ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.