ETV Bharat / sitara

கரோனாவை வென்ற அனுபம் கெர் அம்மா!

மும்பை: கரோனா வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த தனது தாயார் குணமடைந்ததையடுத்து மருத்துவமனை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து, சாதாரண வார்டுக்கு திரும்பியுள்ளதாக நடிகர் அனுபம் கெர் தெரிவித்துள்ளார்.

கரோனாவை வென்ற அனுபம் கெர் அம்மா!
கரோனாவை வென்ற அனுபம் கெர் அம்மா!
author img

By

Published : Jul 25, 2020, 3:49 AM IST

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தொற்றால், தற்போது அரசியல் கட்சிப் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள், ஏன்? பிக் பி அமிதாப் பச்சன் முதற்கொண்டு பலரையும் தாக்கியுள்ளது.

அந்தவகையில் சமீபத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அனுபம் கெரின் அம்மாவுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அனுபம் கெர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்னுடைய அம்மாவுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்னுடைய சகோதரர், அண்ணி, அவர்களது மகன் ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களைத் தொடர்ந்து நானும் பரிசோதனை செய்தேன். பரிசோதனை முடிவில் எனக்குக் கரோனா தொற்று இல்லை என்று முடிவு வெளியானது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது, “கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என் அம்மா, மருத்துவமனை சிகிச்சை முடிந்து குணமடைந்ததையடுத்து மருத்துவமனை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து, சாதாரண வார்டுக்கு திரும்பியுள்ளார்” என நடிகர் அனுபம் கெர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..."வெளியுறவுத் துறையின் அறிக்கை எல்லையில் சீனா ஊடுருவியுள்ளது என்பதற்கான ஆதாரம்" - சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.