மும்பை: இயற்கை அன்னையை பாதுகாக்க அனைவரும் விழப்புணர்வை ஏற்படுத்த உறுதுமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில், காலநிலை மாற்றத்துக்கான காரணம் நாம்தான். எனவே ஒவ்வொருவரும் இயற்கை அன்னையை பாதுகாக்க சுற்றுச்சூழலை தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று #OneWishForTheEarth ஹேஷ்டாக்குடன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உங்களது குடும்பத்தினர், சமூகத்தினர் மத்தியிலும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதே என்று குறிப்பிட்டு #ClimateWarrior ஹேஷ்டாக்குடன் வலியுறுத்தியுள்ளார்.
அமிதாப் குறிப்பிட்டுள்ள #OneWishForTheEarth மற்றும் #ClimateWarrior ஹேஷ்டாக்குகளை பிரபல பாலிவுட் நடிகை பூமி பேட்நேகர் அறிமுகப்படுத்தினார். இயற்கை அன்னையை பாதுகாக்க வேண்டும் எனக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டு பாலிவுட் திரையுலகினரை ஒண்றினைப்பதற்காகவே இந்த ஹேஷ்டாக்கை பயண்படுத்தினார்.
இதையடுத்து பாலிவுட் மெகாஸ்டாரான அமிதாப் தற்போது இந்த ஹேஷ்டாக்குகளை முன்னிறுத்தி இயற்கையை பேணிக்காப்பதன் அவசியம் குறித்து தெரிவித்துள்ளார்.
-
T 3549 - Climate Change is upon us, is real.
— Amitabh Bachchan (@SrBachchan) June 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Stand up, do your bit protect Mother Nature .. On World Environment Day, my #OneWishForTheEarth pledge to be climate conscious, create awareness within families & communities. Every minute counts, be a #ClimateWarrior@bhumipednekar
">T 3549 - Climate Change is upon us, is real.
— Amitabh Bachchan (@SrBachchan) June 2, 2020
Stand up, do your bit protect Mother Nature .. On World Environment Day, my #OneWishForTheEarth pledge to be climate conscious, create awareness within families & communities. Every minute counts, be a #ClimateWarrior@bhumipednekarT 3549 - Climate Change is upon us, is real.
— Amitabh Bachchan (@SrBachchan) June 2, 2020
Stand up, do your bit protect Mother Nature .. On World Environment Day, my #OneWishForTheEarth pledge to be climate conscious, create awareness within families & communities. Every minute counts, be a #ClimateWarrior@bhumipednekar
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி அனுசரிக்கப்படும் நிலையில், இயற்கை காப்பது குறித்து பிரபலங்கள் பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.