உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் நோக்கில் பிரபலங்களும் அரசும் மக்கள் சுத்தத்தைப் பேணிகாக்கவேண்டும். அடிக்கடி சோப்புபோட்டு கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என கூறி வருகின்றனர்.
இதனையடுத்து பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராமில், மக்கள் 20 விநாடிகள் கை கழுவும் போது தண்ணீர் சேமிப்பையும் நினைவில் வைத்திருக்கவேண்டி பதிவிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அதில், கொரோனாவில் இருந்து நீங்கள் தற்காத்துக் கொள்வது அவசியம் 20 விநாடிகள், சோப்பால் உங்கள் கைகளைக் கழுவுங்கள். ஆனால் அந்த 20 விநாடிகளும் தண்ணீர் குழாயைத் திறந்திருக்கவேண்டும் என அவசியம் இல்லை. தற்போது உலகம் இருக்கும் நெருக்கடியில் நாம் புதிய நெருக்கடியை உருவாக்க வேண்டாம். உங்களால் முடிந்த அளவு தண்ணீரை சேமியுங்கள். நாம் ஏற்கெனவே நீர் பற்றாக்குறையை ஆங்காங்கே சந்தித்து வருகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.