ETV Bharat / sitara

தனுஷ், அக்ஷய் குமார் நடிக்கும் 'அட்ராங்கி ரே' வெளியாகும் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Feb 20, 2021, 8:13 PM IST

தனுஷ், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'அட்ராங்கி ரே' படத்தின் வெளியிட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Atrangi Re
Atrangi Re

நடிகர் தனுஷ் 'ராஞ்சனா', 'ஷமிதாப்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாலிவுட்டில் நடிக்கும் படம் 'அட்ராங்கி ரே'. இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கும் இந்தப் படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

'அட்ராங்கி ரே' ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், கரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மதுரையிலும் வாரணாசியிலும் படமாக்கப்பட்டது.

தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லி பறந்துசென்ற 'அட்ராங்கி ரே' படக்குழு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.