ETV Bharat / sitara

தேசிய விருது பெற்ற நடிகருக்கு கரோனா தொற்று! - விக்கி கவுசல்

பூமி பெட்நேகர், அக்‌ஷய் குமார் ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் விக்கி கௌசலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

vicky kaushal
vicky kaushal
author img

By

Published : Apr 5, 2021, 1:15 PM IST

ஹைதராபாத்: தேசிய விருது பெற்ற நடிகர் விக்கி கௌசலுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து விக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில், மிகக் கவனமாக முன்னச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொண்டு வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னோடு தொடர்பில் இருந்த நபர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நடிகை பூமி பெட்நேகரும், விக்கி கௌசலும் ஒரே படப்பிடிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

‘உரி’ திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற விக்கி கௌசல், ‘கைட்டான்’ என்ற படத்தில் நடித்து வந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.