ETV Bharat / sitara

ஆமீர்கானுடன் மீண்டும் நடிக்க விருப்பமில்லை - அபிஷேக் பச்சன்

2013ஆம் ஆண்டு வெளியான தூம் 3 திரைப்படத்தில் ஆமிர்கானுடன் தான் நடித்த அனுபவம் குறித்து, நடிகர் அபிஷேக் பச்சன் பகிர்ந்துள்ளார்.

அபிஷேக் பச்சன் ஆமிர்கான்
அபிஷேக் பச்சன் ஆமிர்கான்
author img

By

Published : Jun 26, 2020, 2:03 PM IST

நடிகர் ஆமிர்கானுடன் பணிபுரிய தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவருடன் நடிக்கப்போவதில்லை என்றும் மாறாக அவரது இயக்கத்தில் நடிக்கவே விரும்புவதாகவும் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

’தூம் 3’ திரைப்படத்தில் நடிகர் ஆமிர்கானுடன் முதன்முதலாக திரையைப் பகிர்ந்துகொண்ட அபிஷேக் பச்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”நீங்கள் இதைப் படிக்க நேரிட்டால் எனது கோரிக்கை குறித்து ஆலோசியுங்கள் ஆமிர்” எனப் பதிவிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு வெளியான ’தூம் 3’ திரைப்படத்தில் அபிஷேக் பச்சன், ஆமிர்கான், கத்ரீனா கைஃப், உதய் சோப்ரா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.

தற்போது இப்படம் குறித்து நினைவுகூர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபிஷேக், ஆமிர்கான் உடன் பணிபுரிவதற்கு விருப்பமான, மென்மையான, அனைத்தையும் பகிரக்கூடிய வெளிப்படையான நடிகர் என்றும், தன்னால் அவர் எவ்வளவு அற்புதமான இயக்குநராக விளங்குவார் என்பதை உணர முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் அத்தனை திறமைகளுக்கு மத்தியிலும் பணிவாக விளங்கிய ஆமிர், படத்தளத்தில் சுட்டித்தனம் செய்து மகிழ்வித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனது இருபதாண்டு கால பாலிவுட் சினிமா வாழ்க்கை குறித்து நினைவுகூரும் வகையிலும் புகைப்படங்கள், காணொலிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு தூதர்களாகும் பிரியங்கா, அனுராக் கஷ்யாப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.