ETV Bharat / science-and-technology

டெஸ்லா ஸ்மார்ட்வாட்ச் : குழந்தைகளுக்காக வெளிவரும் டெஸ்லாவின் ஸ்மார்ட் படைப்பு!

டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள சிறுவர்களுக்கான ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய தயாரிப்பிற்காக டெஸ்லா நிறுவனம், நார்வே நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் எக்ஸ்பிளோரா எனும் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

tesla Xplora smartwatch
tesla Xplora smartwatch
author img

By

Published : Aug 12, 2020, 7:57 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

சான் பிராசிஸ்கோ: அறிமுகமான குறைந்த காலத்திலேயே உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக டெஸ்லா உருவெடுத்தது. இதன் வளர்ச்சி ஒட்டுமொத்த வாகன உலகத்திற்குமே பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. குறிப்பாக, அதிகம் விற்பனையாகும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கே டெஸ்லா தயாரிப்புகள் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள சிறுவர்களுக்கான ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய தயாரிப்பிற்காக டெஸ்லா நிறுவனம், நார்வே நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் எக்ஸ்புளோரா எனும் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது.

10 கோடி முதலீடுகளை ஈர்த்த டிக்டாக் மாற்று செயலி சிங்காரி!

இவ்விரு நிறுவனங்களின் இணைவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையிலேயே இரு நிறுவனங்களின் இணைவு குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

  • Anyone think they can get a good multiplayer Minecraft working on Teslas? Or maybe create a game that interacts virtually with reality like Pokémon Go while driving safely? Like a complex version of Pac-man or Mario Kart?

    — Elon Musk (@elonmusk) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தப் புதிய டெஸ்லா ஸ்மார்ட்வாட்சை கார் சாவியாகப் பயன்படுத்தும் அம்சமும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்த வண்ணமுள்ளன. முன்னதாக, டெஸ்லா நிறுவனம் எதிர்காலத்தில் அதன் புதிய ரகக் கார்களான மாடல் 3, மாடல் ஒய் ஆகிய கார்களுக்கு சாவியில்லா தொழில்நுட்ப வசதியை வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.