ETV Bharat / science-and-technology

ஃபிட்னெஸ்சுக்கு உதவ வருகிறது ‘ஃபிட்பிட் சென்ஸ்’

author img

By

Published : Oct 14, 2020, 10:10 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

எலக்ட்ரோடெர்மல் ஆக்டிவிட்டி உணரி, மாத விடாய் சுழற்சி, ரத்த பிராணவாயு அளவு போன்ற சிறப்பு வசதிகளுடன் ‘ஃபிட்பிட் சென்ஸ்’ எனும் ஸ்மார்ட் கைகடிகாரத்தை தகவல் சாதன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

fitbit sense smartwatch
fitbit sense smartwatch

சான் பிரான்சிஸ்கோ: ஃபிட்பிட் நிறுவனம் சென்ஸ் எனும் புதிய ஸ்மார்ட் கைகடிகாரத்தை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் கைகடிகார சந்தையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி இந்த தகவல் சாதனத்தை ஃபிட்பிட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கரோனா காலத்தை மனதில் வைத்துக்கொண்டு, பயனர்களுக்கு உதவ பல மேம்பட்ட வசதிகளை இதில் நிறுவனம் உட்புகுத்தியுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் இந்த தகவல் சாதனத்தை விற்பனைக்கு கொண்டுவர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஃபிட்பிட் சென்ஸ் அம்சங்கள்

  • ஃபிட்பிட் சென்ஸ் ஸ்மார்ட் கைகடிகாரம் என்பது நிறுவனத்தின் சமீபத்திய முதன்மை சாதனமாகும்.
  • புதிய எலக்ட்ரோடெர்மல் ஆக்டிவிட்டி உணரி (இடிஏ). இது ஸ்மார்ட் கைகடிகார சந்தைக்கு வருகைதரும் புதிய தொழில்நுட்பமாகும்
  • இடிஏ தோலில் வியர்வை அளவைக் கண்காணித்து அளவிடுகிறது. மேலும் ஒரு நபரின் மன அழுத்த அளவையும் கணிக்கும்.
  • புதிய அழுத்த மேலாண்மை மதிப்பெண்கள். இதன் மூலம் செயல்பாடுகள், இதய துடிப்பு, தூக்க முறைகள் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் ஒருவர் அவர்களின் மன அழுத்த அளவை அளவிட முடியும்.
  • இதய துடிப்பு, இதய துடிப்பு மாறுபாட்டைக் கண்டறிய இசிஜி உணரியைக் கொண்டுள்ளது. இது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அறிகுறிகளையும் கண்டறிகிறது.
  • காய்ச்சலின் அறிகுறிகளைக் கண்டறியக்கூடிய அல்லது புதிய மாதவிடாய் சுழற்சியின் தொடக்கத்தைக் கண்டறியக்கூடிய தோல் வெப்பநிலை உணரியைக் கொண்டுள்ளது.
  • ரத்தத்தில் உள்ள பிராண வாயுவின் அளவையும் கணிக்கிறது.
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் அமோ-எல்.இ.டி (AMOLED) திரையுடன் வருகிறது.
  • ஆறு நாட்கள் தாங்கும் மின்கலத் திறன், விரைவாக மின்னூட்டும் வசதியைக் கொண்டுள்ளது.

Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.