நியூயார்க்: கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், இளைஞர்களும் தங்களது கல்வியை தொடர மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தகவல் சாதனங்கள் மூலம் தொலைநிலை கற்றல் தளத்தை உருவாக்கியுள்ளது யுனிசெப் அமைப்பு.
அந்த தளத்தின் பெயர் ‘லேர்ணிங் பாஸ்போர்ட்’ (LEARNING PASSPORT) என்று அழைக்கப்படுகிறது. இதை 18 மாதங்களாக பயிற்சி அடிப்படையில் பரிசோதித்து வந்த யுனிசெப் அமைப்பு, தற்போதுள்ள அவசர கார சூழலில் உலக மக்களுக்கு இது உதவும் என்று அதனை விரிவுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
மூத்த செய்தியாளர் மரணம்: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்
தற்போது உலக நாடுகள் அனைத்தும் இணைய வழிக் கல்வி மூலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க முனைப்புக் காட்டி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி வசதியை வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் யுனிசெப் அமைப்புக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறியுள்ளது.