சான் ஃபிரான்சிஸ்கோ: எலான் மஸ்க் நடத்தும் ’ஸ்டார் லிங்க்’(Star Link) இம்மாதம் வெளியிட வேண்டிய இணைய டேட்டாவை வெளியிடத் தாமதித்தது. வரவிருக்கும் நாளுக்கான இணைய டேட்டா அளவீடுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் லிங்க் எனும் இந்த இணையச்சேவையினை வழங்கி, தன் புதிய பாலிசியான ‘Fair use policy' மூலம் சில மடங்கு இணைய டேட்டாவை முதன்மையாகப் பயன்படுத்தப்படுவதற்காக (Priority access) வழங்குகிறது. காலை 7:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை செலவிடப்படும் இணைய டேட்டாவை இந்த வரையறைக்குள்(Priority access pool) வழங்குகிறது இந்நிறுவனம்.
ஒரு வேளை கொடுக்கப்பட்ட காலவரையறையினைத் தாண்டி பயணிகளுக்கு டேட்டா சேவைகள் தேவைப்பட்டால், கூடுதலாகப் பணம் செலுத்தி, இணைய டேட்டாவை வாங்கலாம் அல்லது மிதவேகமான அடிப்படை டேட்டா சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்நிறுவனப் பயணிகளுக்கு 1 டிபி டேட்டா வழங்கப்படும். மேலும், கூடுதல் டேட்டாவை ஒரு ஜிபிக்கு 25 செண்ட்கள் அளித்து வாங்கிக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான செலவினம் 850 கோடி டாலரை எட்டும் - ஐடிசி