ETV Bharat / science-and-technology

வேலை தேடுபவர்களை குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்! - கரோனா வேலையிழப்பு

கரோனா தாக்கத்தினால் வேலையிழப்பைச் சந்தித்தவர்கள் அதிகரித்து வருகின்றனர். இச்சூழலில், இவர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் தாக்குதல்களை நடத்துகின்றனர். வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறி, அவர்களின் தரவுகளை திருடுவது, ஹேக், வங்கி கணக்கில் கையாடல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

Cybercrimes during Covid
Cybercrimes during Covid
author img

By

Published : Dec 11, 2020, 3:35 PM IST

Updated : Feb 16, 2021, 7:31 PM IST

பெங்களூரு (கர்நாடகம்): கரோனா காலத்தில், மாநிலத்தில் இதுவரை 2008 சைபர் குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தினமும், 10-15 வழக்குகள் பதியப்படுவதாக சைபர் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவிட்-19 தாக்கம் பெருநிறுவன வணிகத்தை ஊசலாட வைத்தது. இதனால் பெருவாரியான பணியாளர்கள் வேலையிழப்பைச் சந்தித்தனர். இப்படியாக வேலையிழப்பைச் சந்தித்த பணியாளர்கள், புதிய வேலைக்காக இணையத்தில் உலாவத் தொடங்கினர்.

இதனை நல்வாய்ப்பாக எடுத்துக்கொண்ட சைபர் குற்றவாளிகள், வேலை தேடுபவர்களை தாக்கத் தொடங்கினர். வேலை தேடுபவர்களுக்கு ஏற்ப, தங்களின் விளம்பரங்களை பதிவுசெய்து, அதன்மூலம் பயனர் தகவல் திருட்டில் ஈடுபட்டுவருகின்றனர். அதுமட்டுமில்லாமல், “வேலைக்கு பதிவுசெய்ய கைப்பேசிக்கு வரும் ‘ஓடிபி’யை கூறவும்” என்று கடவுசொல்லைக் கேட்டுபெற்று, வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் வேலையில், சைபர் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர்.

கரோனாவால் அதிகரித்த சமூக ஊடகங்கள் பயன்பாடு: வல்லுநர்கள் எச்சரிக்கை

இதுவரையில், சுமார் 2008 சைபர் குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் காவல் துறையினர், தினமும் 10-15 வழக்குகள் பதிவுசெய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதில் 2% விழுக்காடுக்கும் குறைவாகவே, வழக்குகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகளை கண்டறிவதில் பெரும் சிக்கல்கள் நிலவுவதாக சைபர் காவல் துறையினர் கூறுகின்றனர்.

“எந்த சூழலிலும் வங்கிகள் கடவுசொல்லைக் குறுந்தகவல், தொலைபேசி வாயிலாக பயனர்களிடம் கேட்காது. பயனர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். இணையதளங்களில் உள்நுழையும் முன், அதன் நம்பகத் தன்மையை சரிபார்த்துக்கொள்ளவும். நிறுவனங்களின் தொலைப்பேசி எண்களை சரிபார்த்துக் கொண்டு, அழைப்புகளை ஏற்கவும்” என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Last Updated : Feb 16, 2021, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.