டெல்லி: சாம்சங் நிறுவனம் இன்று 'கேலக்ஸி டேப் A9’ (galaxy tab A9) என்ற புதிய மாடல் டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப் 8.7 மற்றும் 11 அங்குல டிஸ்ப்ளே என இரண்டு வகைகளில் வெளியாகியுள்ளது. இந்த புதிய மாடல் டேப், டேப் A9 மற்றும் டேப் A9+ என இரண்டு மாடல்களில், சாம்பல், சில்வர் உள்ளிட்ட நிறங்களில் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்த புதிய டேப் குறித்து சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வர்த்தக குழுவின் தலைவர் டிஎம் ராஹ் கூறுகையில், "இந்த கேலக்ஸி டேப் மாடல் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும், மக்களுக்கு பணிரீதியாக உதவும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்த இரண்டு வகையான டேப்களில் சேமிப்பு அமைப்பும் இரண்டு வகைகளில் உள்ளது. ஒன்று 4GB+64GB மற்றும் 8GB+128GB. இந்த A9 மாடல் டேப்களில் பின் கேமரா 8 மெகா பிக்ஸலாகவும் (MP), முன் கேமரா 2 மெகா பிக்ஸலாகவும் (MP) உள்ளது. அதே போல் A9+ மாடல் டேப்பில் பின் கேமரா 8 மெகா பிக்ஸலாகவும் (MP), முன் கேமரா 5 மெகா பிக்ஸலாகவும் உள்ளது.
A9 மாடல் டேப்கள் 5,100mAh பேட்டரிகளுடனும், A9+ மாடல் டேப் 7,040mAh பேட்டரிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் குறித்து சாம்சங் நிறுவனம் கூறுகையில், கேலக்ஸி A9+ மாடல் பயனாளிகளுக்கு மிகச் சிறப்பான சினிமா பார்க்கும் அனுபவத்தை தரும். அது மட்டுமில்லாமல் அதிகமாக கேம் விளையாடும் போதும் கூட இந்த சாதனம் வேகமாக செயல்படும் திறன் கொண்டது.
மேலும் இந்த டேப் வகையில் டால்பி அட்மாஸ் (dolby atmos) ஒலி திறன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேலக்ஸி டேப்கள் மெலிசாகவும், மென்மையான பேக் கவருடன் பயன்படுத்துவதற்கு எளிதான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டேப்பில் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய ஏதுவாக மூன்று ஸ்பிளிட் ஸ்கிரீன் முறை உள்ளது. மேலும் பயனாளிகள் வசதிக்காக இந்த டேப்பில் ஸ்கிரீன் ரெக்கார்டர் உள்ளது. இது குறிப்பிட்ட பக்கத்தில் வெளியிடப்படும் தகவலை பதிவு செய்யும் வேலையை எளிதாக்குகிறது.
இதையும் படிங்க: நீரிழிவு நோயால் வாய்க்கு இவ்ளோ ஆபத்தா.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!