வாஷிங்டன்: மனித உடலில் நினைவாற்றல், உணர்ச்சி, தொடுதல், இயக்கம், பார்வை, சுவாசம், வெப்பநிலை உள்ளிட்ட செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் முக்கிய உறுப்பு மூளையாகும். இந்த மூளை நரம்பு மண்டலங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டால், பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
மூளை தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடந்துவருகின்றன. அந்த வகையில், காற்று மாசுபாடு காரணமாக மூளையின் செயல்பாட்டில் பின்னடைவு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் காரணமாக ஏற்படும் காற்று மாசு மனித மூளையின் செயல்பாட்டை சில மணிநேரங்கள் வரை பாதிக்கலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் Magnetic Resonance Imaging எனப்படும் எஃப்எம்ஆர்ஐ முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதாவது, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட நிலக்கரி தொடர்பான திரவம் எரிக்கப்படும்போது வெளியேற்றப்படும் மாசுக்காற்றினை ஒருவர் 2 மணி நேரம் தொடர்ந்து சுவாசிக்கும்போது, அவரது மூளையின் பல்வேறு பகுதிகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதில் பின்னடைவு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ் கார்ல்ஸ்டன் கூறுகையில், காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், மூளை தொடர்பான பாதிப்புகளை கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட்டதில்லை. முதல்முறையாக நாங்கள் முயற்சித்துள்ளோம். 2 மணி நேரம் டீசலால் வெளியேற்றப்படும் மாசுக்காற்றை சுவாசித்த ஒருவரது மூளையின் செயல்பாடுகளையும், அதே நேரத்தில் சுத்தமான காற்றை சுவாசித்த மற்றொருவரது மூளையின் செயல்பாடுகளையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தினோம்.
இந்தப் பகுப்பாய்வு 25 ஆரோக்கியமான 25 வயது மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் காற்று மாசுபாடு மூளையின் இயல்புநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்கும்படி இருந்தது. அதாவது, சுத்தமான காற்றை சுவாசித்தவர்களது மூளையின் சிந்தனை மற்றும் நினைவாற்றல் மாசுபாட்ட காற்றை சுவாசித்தவர்களை விட பன்மடங்கு துரிதமாகவும் துல்லியமாகவும் இருந்தது.
மாசடைந்த காற்றை சுவாக்கும் மனித மூளையின் செயல்பாடுகளில் பின்னடைவை ஏற்பட்டது. இந்த தாக்கம் சில மணி நேரம் மட்டுமே என்றாலும் ஒரு நாளை பல முறை இப்படி மாசுபாடான காற்றை சுவாசித்தால் நிலைமை வேறு. அது நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வருங்காலத்தில் சுத்தமான காற்றை வெளியேற்றவும், மாசு காற்று ஏற்படுவதை குறைக்கவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் ஓர் 'கூகுள் குட்டப்பா'; பள்ளி மாணவன் கண்டுபிடித்த சூப்பர் ரோபோ