சி.எஸ்.ஐ.ஆர்.ஓ., (ஆஸ்திரேலியா): ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கம்பா புல் வகையின் அதீத பரவலை கண்டறிய இயந்திர கற்றல் முறையை ஆராய்ச்சியாளர்கள் செயல்படுத்தவுள்ளனர்.
வறண்ட நிலத்திலும் நின்று வளரும், இந்த வகை தாவர புல் வகை, 4 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் இந்த புல்லானது, பல நேரங்களில் பெரும் காட்டுத் தீயிக்கு வழிவகுத்து, பல் உயிர் பெருக்கத்துக்கு தடையாக மாறிவருகிறது.
இதனால், சுற்றுச்சூழலில் பல மோசமான விளைவுகளை காண நேர்கிறது. இதனைக் களைய விஞ்சானிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, புல்லின் அதீத வளர்ச்சியையும், களைகள் வளருவதையும் கண்காணிக்க இயந்திர கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த இயந்திரக் கற்றல் தொழில்நுட்பம் உடன், உயர் தெளிவுத்திறன் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு புல்லின் வளர்ச்சியைக் கண்டறியமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதனைக் கொண்டு, புல் வளர்ச்சி கண்டறிதல் வேலைகளை எளிதில் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.