வின்ச்கோம்ப்
இங்கிலாந்து நாட்டின் வின்ச்கோம்ப் நகரின் வடகிழக்கில், பிப்ரவரி 28ஆம் தேதி இரவு விண்கல் ஒன்று வந்து விழுந்தது. இதனை சர்வதேச விண்கல்-கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டுபிடித்த விஞ்ஞனிகள், சம்பவயிடத்திற்கு விரைந்து விண்கல்லை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள்களாக நீண்ட இந்த தேடுதல் பணியின் இறுதியில், இரண்டு பகங்களாக விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
510.291 கிராம் எடைக் கொண்டுள்ள இந்த இரண்டு விண்கற்களும், முதல் கட்ட ஆராய்ச்சிக்காக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர், விண்கற்களின் மாதிரிகள் இங்கிலாந்து நாட்டில் உள்ள முக்கிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவற்றின் முதல்கட்ட ஆராய்ச்சி முடிவில், இந்த விண்கல் கார்பனேசிய காண்டிரைட்டுகள் என்னும் அரிய வகையை சார்ந்தது என்பதும், இதுபோன்ற ஒரு விண்கல் இங்கிலாந்து நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த கற்களின் அடுத்தடுத்த ஆராய்ச்சிகள் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளன.
கார்பனேசிய காண்டிரைட்(திரவ ஓட்டம் உள்ள விண்கல்)
இதுகுறித்து மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் விண்கல் நிபுணர் கேத்ரின் ஜாய் கூறுகையில், கார்பனேசிய காண்டிரைட் (Carbonaceous chondrite) விண்கலானது பெரும் வெடிப்பின் போது உருவாகிவை. திரவ ஒட்டம் கொண்டிருக்ககூடிய பாறை வகையாகும். இதுவரை பூமியில் ஏறக்குறைய 65,000 விண்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில், 51 மட்டுமே கார்பனேசிய காண்டிரைட்டுகள். இந்த வகை விண்கல்லின் கலவைகள், அண்டக் கோள்களின் தொடக்கம் குறித்தும், பூமி மற்றும் பிறக் கோள்களுக்கு தண்ணீர் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் விளக்கப் பயன்படும்.
ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கார்பனேசிய காண்டிரைட்டுகளின் வேதியியல் மற்றும் தாதுக்களின் அமைப்புகளில் வேறுபாடுகள் உள்ளன. எளிதாக சொன்னால், பூமி இதுவரை கண்டிராத விண்கல்லை ஆராய்ச்சி செய்யப்போகிறது. இந்த வகை விண்கற்கள் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையே உள்ள வளிமண்டலத்திலிருந்து பிரிந்து வந்திருக்கூடிய சான்றுகள் உள்ளன. இதுகுறித்த வேதியியல் பகுப்பாய்வின் தொடக்கத்தில், இதில் ஏராளமான நீர் தாதுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
-
Fantastic footage of last night's #fireball from Ben Stanley's https://t.co/eAMviWBAAV / https://t.co/1wOo3FHJ2u meteor camera in Nuneaton. (People, buy this camera!) The fireball may have dropped meteorites in Gloucestershire. @amsmeteors @UKMeteorNetwork @trilby pic.twitter.com/Q8XqkeopDC
— SCAMP - a component of the FRIPON network (@SCAMP_Meteors) March 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Fantastic footage of last night's #fireball from Ben Stanley's https://t.co/eAMviWBAAV / https://t.co/1wOo3FHJ2u meteor camera in Nuneaton. (People, buy this camera!) The fireball may have dropped meteorites in Gloucestershire. @amsmeteors @UKMeteorNetwork @trilby pic.twitter.com/Q8XqkeopDC
— SCAMP - a component of the FRIPON network (@SCAMP_Meteors) March 1, 2021Fantastic footage of last night's #fireball from Ben Stanley's https://t.co/eAMviWBAAV / https://t.co/1wOo3FHJ2u meteor camera in Nuneaton. (People, buy this camera!) The fireball may have dropped meteorites in Gloucestershire. @amsmeteors @UKMeteorNetwork @trilby pic.twitter.com/Q8XqkeopDC
— SCAMP - a component of the FRIPON network (@SCAMP_Meteors) March 1, 2021
நீராதாரக் கோள்கள்
பெரும் வெடிப்பின் போது சிதறிய பெரும் பாறைகள் கோள்களாக உருமாற்றம் பெற்றன. அதாவது, நமது சூரியக் குடும்பத்தில் உள்ள புதன் சூரியனுக்கு மிகவும் அருகிலுள்ளதால் அதில் நீராதார சூழல் ஏற்பட வாய்பில்லை. அதேபோல, மிகவும் தொலைவில் உள்ள யுரேனஸ் பனியில் உறைந்து பனிக்கோளாக உள்ளது. இடையில் உள்ள பூமி நீராதார சூழலுக்கு ஏற்றால் போல உருமாற்றம் பெற்றுள்ளது. ஒருவேளை பூமி தனது சுற்றுப்பாதையிலிருந்து விலகி சூரியனுக்கு அருகில் சென்றால் நீராதாரமின்றி வறண்டு போகும். இதேபோல, தொலைவாகச் சென்றால் பனியில் மூழ்கி உறைந்துவிடும். இப்படி அண்டக் குடும்பத்தில் வெப்பத்திற்கும், குளிருக்கும் இடைப்பட்டு நீராதக் கோள்களாக உருமாற்றம் பெற்றவையிலிருந்து பிரிந்து வந்த விண்கற்கள் கார்பனேசிய காண்டிரைட்டுகள் என அழைக்கப்படுகின்றன.
பூமி மற்றும் விண்வெளியின் ரகசியங்கள்
இந்த விண்கள் சூரிய மண்டலத்தில் உள்ள நீராதாரக் கோள்களின் எரிமலை வெடிப்புகள் மூலம் தப்பித்ததா அல்லது பெரும் வெடிப்பில் சிதறிய கோளின் எச்சமா? என்னும் விவாதத்திற்குரியது. இதன் கார்பனேசிய காண்டிரைட்டுகளில் உள்ள நீரேற்றப்பட்ட தாதுக்களைப் பற்றிய ஆராய்ச்சியானது, நமக்கு பூமியின் பெருங்கடல்களில் எப்படி நீர் நிரப்பப்பட்டது என்பது குறித்து கண்டறிய உதவும். இந்த விண்கல், சூரிய குடும்ப வரலாற்றுத் தடயங்கள் மட்டுமல்லாமல், நீருள்ள புதிய கோள்களை பற்றிய பல ரகசியங்களையும் அறிந்துகொள்ள தொடக்கமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: கப்பல் லைவ் ஸ்ட்ரீமிங்கில் சிக்கிய பச்சை நிற விண்கல்!