டெல்லி: வாட்ஸ்அப்பில் வீடியோ காலில் 32 நபர்கள் வரை பங்கேற்க உதவும் வகையில், 'கம்யூனிட்டிஸ்' என்ற வசதியை மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இன்று (நவ.3) அறிமுகம் செய்துள்ளார்.
வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு இப்புதிய வசதியானது, ஒரு மிகப்பெரிய பரிணாமமாக அமையும் எனவும்; இது குறித்து தனது முகநூலில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் உருவாக்கப்படும் துணைக்குழுக்கள் உள்ளிட்டவைகளின் தனிப்பட்ட செய்திகள் பாதுகாக்கப்படும் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப்பில் குழுக்களில் 1,024 வரை இணையும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குழுக்களில் பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இப்புதிய அம்சத்தில் உரையாடல்கள் அனைத்தும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்படும் எனவும்; இதற்கிடையில், பயனாளிகள் இதில் பணம் செலுத்தும் வசதியை உபயோகிப்பதன் மூலம், இந்தியாவில் ஜியோ மார்ட்டிற்கு ஒரு பெரிய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கூகுளின் அதிரடி அறிவிப்பு.. மேப் சேவை நிறுத்தம்..