ETV Bharat / science-and-technology

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய டேப்லெட், லேப்டாப் வெளியீடு!

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக ’சர்பேஸ் கோ 2’ என்ற டேப்லெட்டையும் ’சர்பேஸ் புக் 3’ என்ற லேப்டாப்பைும் வெளியிட்டுள்ளது.

microsoft surface go 2
microsoft surface go 2
author img

By

Published : Nov 17, 2020, 5:21 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

கம்ப்யூட்டர் இயங்குதளங்களையும் Microsoft Office 360 போன்ற செயலிகளுக்கும் பெயர்போனது பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம். ஸ்மார்ட்போன் சந்தையைப் பிடிக்க மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சி, தோல்வியில் முடிந்தது அனைவருக்கும் தெரியும்.

அதேநேரம் மைக்ரோசாப்ட் நிறுவனம் டேப்லெட் மற்றும் லேப்டாப் பிரிவில் ஒரு குறிப்பிட்ட அளவு சந்தையைக் கொண்டுள்ளது. இந்தப் பிரிவுகளில் தனது சந்தையை விரிவாக்கும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ’சர்பேஸ் கோ 2’ என்ற டேப்லெட்டையும் மைக்ரோசாப்ட் ’சர்பேஸ் புக் 3’ என்ற லேப்டாப்பையும் சர்வதேச அளவில் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த இரு சாதனங்களும் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை இயக்க அலுவலர் ராஜீவ் சோதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சர்பேஸ் கோ 2, சர்பேஸ் புக் 3 ஆகிய சாதனங்கள் வாடிக்கையாளரின் பல்வேறு தேவைகளை பூர்த்தியும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

சர்பேஸ் கோ 2 வசதிகள்

  • 10.50 இன்ச் டிஸ்பிளே
  • இன்டெல் பென்டியம் கோல்ட் பிராசஸர் 4425Y
  • 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • பின்புறம் 8 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 5 மெகாபிக்சல் கேமரா

இதன் விலை 47,599 ரூபாயில் தொடங்குகிறது.

சர்பேஸ் புக் 3 வசதிகள்

  • 13 மற்றும் 15 இன்ச் டிஸ்பிளே
  • 10th-Gen Ice Lake Core i5 மற்றும் i7 பிராசஸர்
  • டச் ஸ்க்ரீன் வசதி
  • 256 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ்

இதன் விலை 1,56,299 ரூபாயில் தொடங்குகிறது.

இதையும் படிங்க: சாம்சங் நிறுவனத்தின் புதிய 5nm எக்ஸ்சினோஸ் 1080 சிப்செட்!

Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.