ETV Bharat / science-and-technology

சைபர் தாக்குதல்கள் 37 விழுக்காடு அதிகரிப்பு - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்

டெல்லி: 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியாவில் சைபர் தாக்குதல்கள் 37 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

cyberattacks
cyberattacks
author img

By

Published : May 24, 2020, 12:15 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

இந்தியாவில் நடைபெறும் சைபர் தாக்குதல்கள் குறித்து பிரபல ஆன்ட்டி வைரஸ் நிறுவனமான காஸ்பர்ஸ்கி செக்யூரிட்டி நெட்வொர்க் (கே.எஸ்.என்) புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியாவில் சைபர் தாக்குதல்கள் 37 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற 52,820,874 சைபர் தாக்குதல்களை காஸ்பர்ஸ்கி ஆன்ட்டி வைரஸ் வெற்றிகரமாகத் தடுத்துள்ளாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் சைபர் தாக்குதல்களில் சர்வதேச அளவில் இந்தியா 27ஆவது இடத்தில் உள்ளது. 2019ஆம் ஆண்டில் கடைசி காலாண்டில் இந்தியா 32ஆவது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து காஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் ஆசியா பசிபிக் பிரிவின் மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சரோப் சர்மா கூறுகையில், "2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சைபர் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இரண்டாம் காலாண்டிலும் இதே நிலைதான் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். குறிப்பாக ஆசியா பசிபிக் பகுதியில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன" என்றார்.

இணைய சர்வர்களை குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களில் இந்தியா 11ஆவது இடத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் இதுபோல 22,99,682 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இது 2019ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் நடைபெற்ற 8,54,782 தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம்.

"அதிகப்படியான பயன்பாடு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் காரணமாக தற்போது ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் குறிவைக்கப்படுகின்றன. தரவு கசிவு, பாதுகாப்பற்ற வைஃபையை நெட்வொர்க்கில் இணைப்பது, போலி இணைப்பு மூலம் தாக்குதல், வைரஸ் போன்றவை தற்போது ஸ்மார்ட்போன்களை அதிகரித்துள்ளது" என்றார்.

சைபர் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க அனைத்து நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை வலுவான இணையப் பாதுகாப்பைக் கட்டமைக்க ஒதுக்க வேண்டும் என்று காஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் தெற்கு ஆசிய பொது மேலாளர் திபேஷ் கவுரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குறிவைக்கப்பட்டுள்ள இந்திய கூட்டுறவு வங்கிகள்!

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.