சாம்சங் நிறுவனத்தின் புதிய அல்ட்ரா ஹெச்டி தொழில்நுட்பம் கொண்ட பிசினெஸ் டிவி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதில் புதுமையான செயலிகளின் பயன்பாடு, காட்சி அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த தொலைக்காட்சிக்கு மூன்று வருடம் வாரண்டியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முக்கியமாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சாம்சங் இந்தியா சார்பாக புதிய பிசினெஸ் டிவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாம்சங் பிசினெஸ் செயலி ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டிலும் கிடைக்கும். இதனை எவ்வித கட்டணமும் இன்றி எளிய முறையில் செயல்படுத்திக் கொள்ளலாம்.
இந்தத் தொலைக்காட்சி பற்றி சாம்சங் இந்தியாவின் துணைத் தலைவர் புனீத் சேத்தி பேசுகையில் , ''சாம்சங் நிறுவனத்தின் சார்பாக தொடர்ந்து நுகர்வோரின் வளர்ந்துவரும் வணிகத் தேவைகளைப் புரிந்துகொண்டும், அவர்களின் உயர்தர தீர்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்தப் புதிய பிசினெஸ் தொலைக்காட்சி மூலம் நாங்கள் பல்வேறு சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்புகிறோம்'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க:2 ஜிபி டேட்டா ஃபைல்களை அனுப்பும் வசதி - அதிரடி காட்டும் டெலிகிராம்